கோபிசெட்டிபாளையத்தில் விவசாயிகள்\ விவசாயத் தொழிலாளர் சிறப்பு கருத்தரங்கம்
ஈரோடு, செப்.21 - ஒன்றிய மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் மக்களுக்கு விரோதமான கொள்கைகளை மாற்றிட வலியுறுத்தி, ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தார். இக்கருத்தரங்கில் ‘விவசாய நெருக்கடியும், தீர்வை நோக்கியும்’ என்ற தலைப்பில் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான பெ.சண்முகம் உரையாற்றினார். ‘வீதியிலிருந்து வாழ்வின் விடியலை நோக்கும் விவசாயத் தொழிலாளர்கள்’ என்ற தலைப்பில் விவசாயத் தொழிலாளர் சங்க அகில இந்திய இணைச் செயலாளர் வி.சிவதாசன் எம்.பி., பேசினார். விதொச மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி.பெருமாள் உள்ளிட்டோரும் உரையாற்றினர். எஸ்.வி.மாரிமுத்து நன்றி கூறினார்.