திருப்பூரில் கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா
திருப்பூர், அக்.2- திருப்பூர், குமார் நகர் கதர் அங்காடி வளாகத்தில், அண் ணல் காந்தியடிகளின் 157 பிறந்தநாள் விழா மற்றும் கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா நிகழ்ச்சியில் அண்ணல் காந்தியடி கள் உருவப் படத்தை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே திறந்து வைத்து மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். திருப்பூர் மற்றும் அவிநாசியில் செயல்படும் 2 காதி கிராப்ட்கள் மூலம் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கு ரூ.3 கோடி 60 லட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், ரூ.1 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கதர் பட்டு மற்றும் பாலியஸ்டர் ரகங்கள், சலவை சோப்புகள், குளியல் சோப்புகள், காலணிகள், ஊதுபத்தி, கம்யூட்டர் சாம்பிராணி, கப் சாம்பிராணி, சந்தன மாலைகள், சுகப்பிரியா வலி நிவா ரணி, எழில் ஷாம்பு மற்றும் அக்மார்க் தேன் வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டிற்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 காதி கிராப்ட்களும், அதனைச் சார்ந்து பல்வேறு இடங்களில் (அரசு அலுவலகங்களில்) கூடுதலாக தற்போது கதர் விற் பனை நிலையங்களும் அமைத்து அனைத்து கதர், பட்டு, பாலி யஸ்டர் இரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியில் தீபாவளி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சி யர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (தமிழ்நாடு கதர் கிராமத்தொழில்கள்) எஸ்.சந்திரசேகரன், செய்தி மக்கள் தொடர்பு செ.கு.சதீஸ்குமார் மற்றும் தொடர்புடைய அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
