tamilnadu

img

பெரம்பலூரில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூரில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர், ஆக. 24-  பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில், பொதுமக்களுக்கான புதிய சட்டவடிவிலான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் பெரம்பலூர் அருகே உள்ள சத்திரமனை கிராமத்தில் நடைபெற்றது.  முகாமில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சரண்யா பேசுகையில், “நீதிமன்றத்தை நாடி மக்கள் சென்ற காலம் மாறி மக்களை தேடி நீதிமன்றம் வரும் காலம் வந்து விட்டது. மேலும், மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை சட்டங்கள், அவர்களுக்கு தேவையான உரிமை களையும், உதவிகளையும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செய்து தரும். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு 24 மணி நேரமும் தங்களுக்கு உதவி செய்ய 15100 என்ற சட்ட ஆலோசனை இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.  இதையடுத்து, குழந்தை திருமண தடை சட்டங்கள் குறித்தும், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் எண் 1098, பெண்களுக்கான இலவச எண் 181 மற்றும் மூத்த குடிமக்களுக்கான இலவச எண் 14567 ஆகிய இலவச எண்களை குறிப்பிட்டு சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா பேசினார்.  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சேவைகள் குறித்து வழக்கறிஞர் முருகையன் பேசினார்.  மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல வாரியம், மத்திய சங்கத்தின் கண்காணிப்புக் குழு உறுப்பினர் நெடுஞ்செழியன், சட்டப்பணிகள் செயல்பாடுகள் குறித்தும், இழப்பீட்டு நிதி குறித்தும் பேசினார். பெண்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.  செல்லப்பன் வரவேற்புரையாற்றினார். நடராஜ் நன்றி தெரிவித்தார்.