சிபிஎம் உறுப்பினர்களுக்கான சிறப்பு பேரவை
புதுக்கோட்டை, ஆக. 30- புதுக்கோட்டை மாவட்ட தொழிற்சங்க அரங்கில் பணியாற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கான சிறப்பு பேரவை புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
பேரவைக் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் க.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். ஆர்.வீராச்சாமி தலைமையில் `அரசியல் தீர்மானம் ‘ என்ற தலைப்பில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, சி.மாரிக்கண்ணு தலைமையில் ஸ்தாபன தீர்மானத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ ஆகியோர் உரையாற்றினர்.
ஏ.சி.செல்வி தலைமையில் மாவட்டக்குழு முடிவுகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், முகமது கனி தலைமையில் ஓராண்டு திட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் ஆகியோர் பேசினர். முன்னதாக எஸ்.தேவமணி வரவேற்க, கே.ரெத்தினவேல் நன்றி கூறினார்.