‘சமூக ஜனநாயக கையேடு’ நூல் வெளியீட்டு விழா
மதுரை, அக். 23 - மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில், பொதுப் பள்ளி களுக்கான மாநில மேடை சார்பில் ‘சமூக ஜனநாயக கையேடு’ நூல் வெளி யீட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் விழாவில் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை உலகத் தமிழ்ச்சங்க இயக்குநர் முனைவர் பர்வீன் சுல்தானா பெற்றுக்கொண்டார். விழாவில், ‘மூட்டா’ தலைவர் பேராசிரியர் பெரியசாமி ராசா, ‘கலகல வகுப்பறை’ சிவா, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், நீதியரசர் சிவராஜ் வி. பாட்டீல் பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் வழக்கறிஞர் எஸ். செல்வகோமதி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநிலப் பொருளாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் மதுரை மாவட்டத் தலைவர் கணேசன், இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் டேவிட் ராஜதுரை, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர் - பெற் றோர் நலச் சங்கத் தலைவர் வழக்குரைஞர் சை. உமர் பாரூக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
