tamilnadu

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி

தஞ்சாவூர், ஜூலை 29-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், வட்டார வள மையத்திற்கு உட்பட்ட, அரசு நடுநிலைப்பள்ளி, உயர் நிலை, மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மொழிப்பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு, பள்ளி வேலை நேரத்தில் சிறப்பு பயிற்சி வழங்க, திறன் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தலையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராமமூர்த்தி, மனோகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பயிற்சியில் 6, 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்பு கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் மொழிப்பாடத் திறன், கணித அடிப்படைத் திறனில் கற்றல் குறைபாடு உடைய மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்க  அறிவுறுத்தப்பட்டது.