tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் சங்க சீர்காழி ஒன்றிய மாநாடு

மாற்றுத்திறனாளிகள் சங்க  சீர்காழி ஒன்றிய மாநாடு

மயிலாடுதுறை, ஆக 1-  மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ் வரன் கோவிலில் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சீர்காழி ஒன்றிய 5 ஆவது மாநாடு, ஒன்றியத் தலைவர் உத்திராபதி தலைமையில் நடைபெற்றது.  முன்னதாக வைத்தீஸ்வரன் கோவில் பேருந்து நிலையம் அருகிலிருந்து, மாநாடு  நடைபெற்ற மண்டபம் வரை மாற்றுத்திற னாளிகள் கோரிக்கைகளை முழக்கமிட்டு பேரணியாக வந்தனர். சங்கத்தின் கொடியை  ஜே.அய்யனார் ஏற்றி வைத்தார். முருகன்  வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் கணேசன் துவக்கி வைத்து உரையாற்றினார். வேலை அறிக்கையை ஒன்றியச் செய லாளர் நாகராஜன், வரவு-செலவு அறிக் கையை ஒன்றியப் பொருளாளர் சுமதி ஆகி யோர் முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி,  மாவட்டப் பொருளாளர் லெட்சுமி, மாவட்டத்  துணைத் தலைவர் கோவிந்தசாமி ஆகி யோர் பேசினர்.  நூறு நாள் வேலையில் முழு ஊதிய மும், நான்கு மணி நேரம் வேலையும் வழங்க வேண்டும். சுய தொழில் தொடங்க  நிபந்தனையற்ற கடன் வழங்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  மாநாட்டில், 17 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டு, ஒன்றி யத் தலைவராக தமிழ்மாறன், செயலாள ராக நாகராஜன், பொருளாளராக சுமதி, துணைத் தலைவர்களாக உத்திராபதி, எஸ். கமலக்கண்ணன், துணைச் செயலா ளர்களாக முருகன், இளங்கோவன் ஆகி யோர்  தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச்  செயலாளர் புருஷோத்தமன் நிறைவுரை யாற்றினார். புதிய ஒன்றியச் செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.