எஸ்எப்ஐ சார்பில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி அண்மையில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை ராகுல் மாங்கூட்டத்தில் ராஜினாமா செய்தார். அவர் வகிக்கும் பாலக்காடு சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜி னாமா செய்யுமாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலின் மனைவி உட்பட பலரும் வற்புறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் வரலாற்றில் ராகுல் மாங்கூட்டத்தில் ஒரு அழுகிய அத்தியா யம் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உருவான பிறகு இது போன்ற ஒரு சம்பவம் இதுவே முதல் முறையாகும். எம்எல்ஏ பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்யா விட்டால், அந்த பதவியில் அவர் தொடர்ந்து செயல்பட முடியும் என்பது தவறான எண்ணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை வலியுறுத்தும் வகையில், ராகுலிடம் இருந்து தங்களைக் காப்பா ற்றிக் கொள்ள இளம் பெண்களுக்கு தற்காப்பு வகுப்பை (செல்ப் டிபன்ஸ்) நடத்த எஸ்எப்ஐ திட்டமிட்டுள்ளது. அதன் படி ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பாலக்காடு மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் மகளிர் துணைக்குழு கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையம் அருகே தற்காப்பு பயிற்சி வகுப்பை திங்களன்று நடத்தியது.