tamilnadu

img

குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்

குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்

சேலம், ஜூலை 30- சேலத்தம்பட்டி அருகே காய்வாயை மண்ணைக் கொட்டி அடைத்ததால், குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீர் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற் பட்டுள்ளது. சேலம் மாவட்டம், சேலத்தம்பட்டியை அடுத்த காளி யம்மன் கோவில் அருகிலுள்ள மீன்வாயன் தெரு பகுதி யில் எண்ணற்ற குடியிருப்புகள் உள்ளன. கழிவுநீர் செல்ல இங்கு முறையாக சாக்கடை கால்வாய் உள்ளது.  தற்போது அந்த கால்வாயை தனிநபர் ஒருவர் மண் ணைக் கொட்டி மூடிவிட்டதால், குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீர் தேங்கி தற்போது நோய்த்தொற்று ஏற்பட்டு வரு வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  இதுகுறித்து மேலும் கூறுகையில், கழிவுநீர் பிரச் சனை சம்பந்தமாக சேலம் ஊராட்சி அதிகாரிகளிடம் முறையிட்ட போது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தொடர்ந்து கால்வாய் நிரம்பி கழிவு நீர் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் அவ்வழியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குடியி ருப்பில் பல குழந்தைகள் உள்ளதால், நோய்த்தொற்று  ஏற்பட்டு வருகிறது. எனவே, உடனடியாக கால்வாயில் மண்ணைக் கொட்டி அராஜகத்தில் ஈடுபடும் நபர் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாயை சீரமைத்து கழிவுநீர் குடியிருப்புக்குள் வராமல் இருக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என்றனர்.