tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

செப்.16 முற்றுகை போராட்டம்  மானாமதுரையில் பிரச்சாரம் மானா

மதுரை, செப்.14- மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலை தொடங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி செப்டம்பர் 16 அன்று நடக்கவிருக்கிற முற்றுகைப் போராட்டத்தை விளக்கி அனைத்துக் கட்சி போராட்டக் குழு சார்பாக  மானாமதுரை நகரத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்  குழு உறுப்பினர் உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராம லிங்க பூபதி, ஒன்றியச் செயலாளர் முனியராஜ், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் தீனதயாளன், மாற்றுத்திறனாளி சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு, கொன்றக்குளம் செந்தில், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பி னர் ராஜா ராமன் ஆகியோர் பிரச்சார இயக்கத்தில் ஈடு பட்டனர். மானாமதுரை நகரத்தில் கண்ணார் தெரு, அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம், மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் பிரச்சார இயக் கம் நடைபெற்றது. ஏனாதியில் விவசாயிகள் சங்க கிளை அமைப்பு சிவகங்கை, செப்.14- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா ஏனாதி  கிராமத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க அமைப்புக் கூட்டம் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டி, ஒன்றியச் செயலா ளர் நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில்,  தலைவராக மணிகண்டன், செயலாளராக அய்யாசாமி, பொருளாளராக முனீஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு பள்ளி அருகே  கஞ்சா விற்றவர் கைது திருவில்லிபுத்தூர், செப்.14- நத்தம்பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மூவரை வென்றான் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே  நத்தம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் உதயசூரி யன் ரோந்து வந்த போது, சிவகாசி வட்டம் கம்மா பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் போதை  பொருளை விற்பனைக்காக வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிந்து விசா ரித்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்றவர் வாகனம் மோதி பலி இராஜபாளையம், செப்.14- இராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்ன குருசாமி என்பவரது மகன்  குரு என்ற சிவா (25). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் இரு சக்கர வாகனத்தில்  இராஜபாளையத்தில் இருந்து எஸ். ராமலிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.  கோதை நாச்சியார்புரம் விலக்கிற்கு முன்பு சென்று  கொண்டிருக்கும் போது பின்னால் வந்த வாகனம் மோதி  நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலை தடுமாறிய குரு என்ற சிவா தலையில் பலத்த காயம்பட்டு சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.