செங்கோட்டையன் பதவிகள் பறிப்பு; எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!
திண்டுக்கல்: 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர் களை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாக அறிவித்தார். பாஜக தூண்டுதலிலேயே செங்கோட்டையன் இந்த பேட்டியை அளித்ததாக அதிமுக வட்டாரத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. இந்தப் பின்னணியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சனிக்கிழமை யன்று திண்டுக்கல்லில் அதிமுக மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வாதன், காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரோடு ஆலோசனை நடத்தி னார். அதனைத் தொடர்ந்து, அதிமுக ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் மற்றும் அதிமுக அமைப்புச் செயலா ளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
‘எனது பணி தொடரும்’
ஈரோடு: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட் டையன் அளித்த பேட்டியில், “ஜனநாயக முறைப்படி பொறுப்புகளில் இருந்து நீக்கும் முன்பு என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற 10 நாள் கெடு தொடர்கிறது. என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்; கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அதிமுகவை ஒருங்கிணைக்கும் எனது பணி தொடரும்” என்றார்.
மருத்துவக் கல்வி இயக்குநராக மரு.சுகந்தி ராஜகுமாரி பொறுப்பேற்பு
சென்னை: தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக மருத்துவர் சுகந்தி ராஜகுமாரி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார் இதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு சூரங்குடி கிரா மத்தைச் சேர்ந்த மருத்துவர் சுகந்தி ராஜகுமாரி, 36 ஆண்டு களாக மருத்துவக் கல்வி பணியில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தோல் மருத்துவத் துறையில் பேராசிரியர் மற்றும் துறை தலைவராக பணி யாற்றிய அவர், 2019இல் பதவி உயர்வு பெற்று கன்னி யாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வரானார். முன்னதாக, மரு. சங்குமணி ஜூன் 30ஆம் தேதி யுடன் ஓய்வு பெற்றதையடுத்து, கூடுதல் இயக்குநர் தேரணிராஜன் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டிருந் தார். இரண்டு மாதங்கள் கடந்த பின்னர், இப்போது சுகந்தி ராஜகுமாரி முழுமையான இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். 46
சிறந்த காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் விருதுகள்
சென்னை: தமிழக முதலமைச்சர் கடந்த ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற 2025-2026-க்கான பட்ஜெட் கூட்டத் தொடரில், 1859 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6 ஆம் தேதி ஆண்டுதோறும் காவலர் நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் முதன் முறையாக காவலர் நாள் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை தலை மையகம், சென்னையில் தமிழ்நாடு காவல்துறையின் வரலாறு குறித்த சிறப்புத் திரையிடலுடன் கொண்டாட்டங் கள் தொடங்கின. 2023 ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல் பட்டதற்காக, தமிழ்நாடு காவல்துறையின் ஒவ்வொரு மாவட்டம், நகரம், பெருநகர சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 46 சிறந்த காவல் நிலையங்களின் காவல் நிலைய அதிகாரிகளுக்கு, தமிழக டிஜிபி வெங்கட்ராமன் தமிழக முதல்வரின் விருதுகளை வழங்கினார். டிஜிபி வெங்கட்ராமன் காவலர் நாளின் முக்கியத்து வத்தை அடிக்கோடிட்டுக் காட்டி, காவல் படையினர் கடமை, மரியாதை மற்றும் சேவையின் லட்சியங்களுக்கு தங்களை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என வலி யுறுத்தினார்.
மருத்துவர் சங்க தலைவர் பணியிட மாற்றம்: முதல்வர் தலையிட கோரிக்கை
சென்னை, செப்.6- தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கை களை முன்வைத்து பாத யாத்திரை நடத்தியதற்காக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மரு. எஸ்.பெருமாள் பிள்ளைக்கு தண்டனையாக பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் இணைப் பேராசிரியராக பணிபுரிந்த மரு. பெரு மாள் பிள்ளையை நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்துள்ளதோடு, குற்ற குறிப்பாணை 17பி-யும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி சாதனை
விழுப்புரம்: தேசிய அளவிலான என்ஐ ஆர்எப் தரவரிசைப் பட்டி யலில் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி குறிப்பிடத் தக்க சாதனை படைத் துள்ளது. 2024ஆம் ஆண்டு 201-300 என்ற தர வரம்பிற்குள் இருந்த இக்கல்லூரி, 2025ஆம் ஆண்டுக்கான என்ஐ ஆர்எப் தர வரிசை பட்டிய லில் 154 ஆவது இடம் பிடித்துள்ளது. இந்திய அளவில் செயல்பட்டு வரும் 52,081 கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இந்த சாதனை தமிழகத்திற் கும், குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்திற்கும் பெரு மையை பெற்றுத் தந்து உள்ளது. வேலூர் மண்ட லத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அர சினர் கலைக்கல்லூரி முதலிடம் வகித்துள்ளது. தேசிய தர வரிசைப் பட்டியலில் இடம் பிடித்த விழுப்புரம் மாவட்டத் தைச் சேர்ந்த ஒரே கல்லூரி என்ற பெருமை யும் இதற்கு உண்டு. இச்சாதனையை அடை வதற்கு அயராது உழைத் திட்ட கல்லூரியின் என்ஐ ஆர்எப் ஒருங்கிணைப்பா ளர் க.ச.சதீஷ் குமார், என்ஐஆர்எப் குழு, கல்லூ ரியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், பேரா சிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி முதல்வர் ஆர்.சிவக் குமார் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரி வித்துள்ளார்.
நீதிமன்றம் கைவிரிப்பு
சென்னை: ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்து சமூக ஊட கங்களில் வெளியான பதிவுகளால் தனக்கு பாது காப்பு கோரி பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலை வர் துரை சண்முக மணி கண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதை விசா ரித்த நீதிமன்றம், சமூக ஊடகங்களில் வரும் மிரட்டல் பதிவுகளுக்காக பாதுகாப்பு வழங்க முடி யாது என்று தெரிவித் துள்ளது.