tamilnadu

img

புலனறிவால் அறியப்பட்டதை மட்டுமே ஏற்க வேண்டும் என்றவர் ஆரியப்பட்டா புத்தக திருவிழாவில் விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் பேச்சு

புலனறிவால் அறியப்பட்டதை மட்டுமே  ஏற்க வேண்டும் என்றவர் ஆரியப்பட்டா புத்தக திருவிழாவில் விஞ்ஞானி  த.வி. வெங்கடேஸ்வரன் பேச்சு

புதுக்கோட்டை, அக். 7-  புலனறிவால் அறிய முடிந்தவற்றை மட்டும்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதியாகச் சொன்னவர் ஆரியபட்டா என்றார் விஞ்ஞர் பிரச்சார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். புதுக்கோட்டை 8 ஆவது புத்தகத் திருவிழாவில், திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பொதுநிகழ்வில் ‘ஆரியபட்டாவின் அதிசய கண்டுபிடிப்புகள்’ என்ற தலைப்பில் அவர் பேசியசாவது:  “பூமி தன்னைத் தானே சுற்றுகிறது என்று ஆரியபட்டா கண்டுபிடித்து எழுதிவைத்தார். அதன்பிறகு வந்தவர்கள் அதனைத் திருத்தி எழுதிவிட்டனர். பூமி சுற்றுவதாக ஆரியபட்டா எழுதியிருக்கிறார். அது தவறு என திருத்தி எழுதியவர்கள் குறிப்பிட்டிருப்பதில் இருந்து, அவரது கண்டுபிடிப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சூரியன், பூமி, நிலவு நேர்க்கோட்டில் இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியன், நிலவு, பூமி நேர்க்கோட்டில் இருக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனை ஆரியபட்டா அப்போதே கண்டறிந்து எழுதிவைத்துள்ளார். அல்காரிதம் என்று இப்போது நாம் அழைக்கும் கணிதவியல் முறையை அந்தக் காலத்திலேயே எளிய முறையில் கண்டறிந்தவர் ஆரியபட்டா. புலனறிவால் அறிய முடிந்தவற்றை மட்டும்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதியாகச் சொன்னவர் ஆரியபட்டா. ஆனால், இன்றைய சமூக ஊடகங்களில் வரும் ஆரியபட்டா பற்றிய தகவல்கள் அப்படியல்ல. நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்சபூதங்களைச் சொன்னபோது, ஆகாயம் என்று ஒன்று இல்லை என உறுதிப்படுத்தி எழுதி வைத்தவர் ஆரியபட்டா. ஆகாயம் இருப்பதற்கான சான்று இல்லை. சான்று இல்லாதவற்றை ஏற்கக் கூடாது என்றார். இனிவரும் காலத்தில் இதுதான் மிகமுக்கியமானது. ஆரியபட்டாவின் வழியில்தான் நாம் செயல்பட வேண்டும்’’ என்றார்.  நிகழ்வுக்கு கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்தார். எழுத்தாளர் அண்டனூர் சுரா கருத்துரை வழங்கினார். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் மு. முத்துக்குமார் வரவேற்க, ஆ. செல்வராசு நன்றி கூறினார்.