tamilnadu

img

செலக்சன் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் படைப்பு கண்காட்சி

செலக்சன் பள்ளியில் மாணவர்களின்  அறிவியல் படைப்பு கண்காட்சி

அறந்தாங்கி, அக். 16-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களால் உருவாக்கப்பட்ட அறிவியல் படைப்புகளின் கண்காட்சி மற்றும் அறந்தாங்கி பகுதியில் மிகவும் புதுமையாக ஆங்கில கண்காட்சியும் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் கண்னையா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் க. சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். மாணவர்களின் அறிவியல் படைப்புகள் சுமார் 350 படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.  இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர்  அபிநயா மற்றும் அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் ஆனந்த் கலந்து கொண்டு துவக்கி வைத்து விழா சிறப்புரை ஆற்றினர்.  மேலும், நிகழ்வில் அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார். அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து இரண்டு அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் அறந்தாங்கி அரசு பள்ளி ஆசிரியர் இணைந்து சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்து இருந்தனர். பள்ளி ஆசிரியர் நிசாம் நன்றி கூறினார்.