பள்ளிக் குழந்தைகளின் வயிறு நிறைகிறது; அறிவு வளர்கிறது
முதலமைச்சர் மகிழ்ச்சி
சென்னை: காலை உணவுத் திட்டத்தின் நற்பயன்களை எடுத்துரைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தொண்டர் களுக்கு கடிதம் எழுதியுள்ளார். “பள்ளிக் குழந்தைகளின் வயிறு நிறைகிறது, அறிவு வளர்கிறது” என்று அவர் குறிப் பிட்டுள்ளார். 2022 செப்டம்பர் 15 அன்று மதுரையில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் மாணவர்களின் வருகையை அதிகரித்துள்ளதாகவும், கற்றல் திறன் மேம்பட்டு உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். ஆகஸ்ட் 26 அன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் பள்ளியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் முன்னிலையில், இத்திட்டம் நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும்” என்றும் அவர் அறிவித்தார்.