tamilnadu

img

அரசுப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

அரசுப்பள்ளியில்  மரக்கன்றுகள் நடும் விழா 

தஞ்சாவூர், செப். 25-  தஞ்சாவூர் வனக் கோட்டம் பட்டுக்கோட்டை வனச்சரகத்தில், தமிழ்நாடு பசுமை இயக்க நாளை முன்னிட்டு, பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி உத்தரவின்படி, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ். சந்திரசேகரன் தலைமையில், புதன்கிழமை மரக்கன்றுகள் நட்டு, உறுதிமொழி ஏற்று கொண்டாடப்பட்டது.  பின்னர், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரம் நடுவதன் அவசியத்தை பற்றியும்,  சுற்றுச்சூழலை பற்றியும், அலையாத்தி மரக் கன்றுகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி உதவி தலைமை ஆசிரியர் குமரவேல், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நீலாவதி, விதை அறக்கட்டளை காந்திராஜன், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள், வனவர் ராஜ்குமார், வனக்கப்பாளர் ராகேஷ் பெர்நாத், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.