தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கையாண்ட லட்சணம் தெரியும் எஸ்.எஸ். சிவசங்கர் பதில்
சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துப் பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், கரூர் சம்பவத்தை தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை அதிமுக அரசு கையாண்டதைப் போல் தாங்கள் எதையும் செய்ய வில்லை என்று கூறினார். அமைச்சர் சிவசங்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், அவரது கருத்து களை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரி பேரவைத் தலைவர் அப்பாவு இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடு பட்டனர். எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் தரையில் அமர்ந்து கொண்டு அமளியில் ஈடுபட்டனர்.