ரூ.177.16 கோடி மீன்வளத் திட்டங்கள் தொடக்கம்
சென்னை, ஆக.12 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக.12) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மொத்தம் 177 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட் டுள்ள 9 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். இந்தத் திட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டம், கோடிமுனை மற்றும் பள்ளம் துறை கிராமங்களில் 61 கோடி ரூபாயில் தூண்டில் வளைவுடன் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள், தூத்துக்குடி மாவட்டம், அமலிநகரில் 58 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம், திரு வள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு ஏரியில் முகத்துவாரம் நிலைப்படுத்துதல் உட்பட பல கிராமங்களில் புதிய மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தல் கோமுகி அணையில் ரூ.5 கோடியில் புதிய அரசு மீன் விதை பண்ணையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மீன் விதை பண்ணையில் ரூ.3 கோடியில் பயிற்சி மையத் துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணை யத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 89 நபர்களுக்கும், கால்நடை பராமரிப்புத் துறைக் காக தெரிவு செய்யப்பட்ட 22 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தெரி வானவர்களுக்கும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கருணை அடிப்படையில் 17 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை தமிழ்நாடு பால் உற் பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற் காக மொத்தம் 179 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.