கட்டுமான நல வாரியத்தில் தேங்கிக் கிடக்கும் ரூ.6000 கோடி
ரூ. 5000 போனஸ் கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, அக். 15 - தீபாவளி போனசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி, புதனன்று (அக்.15) மாநிலம் முழுவதும் நலவாரிய அலுவல கங்கள் முன்பு கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் தர வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதிலிருந்து ஓய்வூதியம் தர வேண்டும், ஒருமுறை பி.எப். திட்டத்தில் இணைந்த தொழிலாளர்களையும் நலவாரியத்தில் உறுப்பினராக்க வேண்டும். நலவாரிய உறுப்பினர்களை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கட்டு மான தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக தியாகராயர் நகரில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு சென்னை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி சிஐடியு துணைப்பொதுச் செயலாளர் வி. குமார் பேசுகையில், “கட்டுமானப் பொருட் களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டு வந்து அவற்றின் விலை கட்டுப் படுத்தப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதனை நிறைவேற்றவில்லை. கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய் பணம் உள்ளது. இதனை கொண்டு, 5 ஆயிரம் ரூபாய் தீபாவளி போனஸ், 2 ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியம் வழங்கவும், பெண் தொழிலாளிகளுக்கு 55 வயதி லிருந்து ஓய்வூதியம் வழங்கவும் நலவாரியக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தமிழக அரசு அமல்படுத்த மறுக்கிறது. தில்லி மற்றும் கர்நாடக மாநிலங்களில் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பாண்டிச்சேரியில் 5 ஆயிரம் ரூபாய் போனஸ் தரப்படுகிறது. இந்த மாநிலங்களை விட வளர்ச்சியில் முன்னிலையில் உள்ள தமிழ கத்தில் ஓய்வூதியத்தை அதிகரிக்க முடியாதா? போன்ஸ் தர முடியாதா?” என்று கேள்வி எழுப்பினார். இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் வி. குப்புசாமி (வடசென்னை), ஜி. செந்தில்குமார் (தென்சென்னை), சம்மே ளன துணைத் தலைவர்கள் ஏ. நடராஜன், லூர்துசாமி, மாவட்ட நிர்வாகிகள் நடராஜன், சிட்டிபாபு, சரவணன் (வட சென்னை), மண வாளன், மார்டின், குமார் (மத்திய சென்னை), பி. சுப்பிரமணி, இ. மூர்த்தி (தென் சென்னை) உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
