பாஜக ஆளும் ம.பி.,யில் ரூ.1,600 கோடி சுவாஹா
ஒரே மழைக்கு குப்பையான பாலகாட் தேசிய நெடுஞ்சாலை
மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. முத லமைச்சராக மோகன் யாதவ் உள்ளார். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் பாலகாட்டின் லாவாடா - மகாராஷ்டிராவின் கோண்டியா இடையே என்எச் 543 (NH 543) என்ற பெயரில் 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் “பாரத் மாலா” திட்டத்தின் ரூ.1,600 கோடியில் இந்த சாலைப் பணி கள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட கேபிசிஎல் கட்டுமான நிறுவ னம் கட்டுமானப் பணியை மேற் கொண்டு வருகிறது. 2026இல் கட்டுமானப் பணி முழுமை யாக நிறைவடைந்து பிரதமர் மோடி இந்த நெடுஞ்சாலையை திறந்து வைத்து அரசியல் விளம்பரம் தேட பாஜக முயற்சி மேற்கொண்டு வரு கிறது. இத்தகைய சூழலில், கடந்த 3 நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக பெய்த கனமழைக்கு ரூ.1,600 கோடி செலவில் கட்டப்பட்ட பாலகாட் தேசிய நெடுஞ்சாலை முழு மையாக சேதமடைந்துள்ளது. புறவழிச் சாலை இணைப்பு பாலங்கள் அபாயகரமான நிலையில் பெயர்ந்து காணப் படுகிறது. குறிப்பாக லாவாடா - குர்சோடி பகுதியில் (பாமோடி கிராமம் அருகே) சாலையின் திண்டு சரிந்ததுடன், தாங்கு சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது. தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தியதே தேசிய நெடுஞ்சாலையின் இந்த அவலநிலைக்கு காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ரூ.1,600 கோடியில்... பாலகாட் தேசிய நெடுஞ் சாலையின் 80% பணிகள் நிறை வடைந்துவிட்டன. இன்னும் 20% பணிகள் மட்டுமே பாக்கி உள்ளன. கிட்டத்தட்ட இது வரை ரூ.1,600 கோடி பணம் செலவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள் ளன. மீண்டும் தேசிய நெடுஞ் சாலையை சீரமைக்க கூடுதல் பணமும் செலவாகும் என்ப தால் பாஜக அரசுகளின் தொடர் ச்சியான ஊழல் சம்பவங்களு க்கு ஏன் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டும்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி யுள்ளன.