tamilnadu

img

இந்திய வளர்ச்சியில் ஜப்பான் தொழில் நுட்பங்களுக்கு பங்கு

இந்திய வளர்ச்சியில் ஜப்பான்  தொழில் நுட்பங்களுக்கு பங்கு 

டோக்கியோவில் மோடி பேச்சு

டோக்கியோ, ஆக. 29 - அரசுமுறைப் பயணமாக ஜப்பான்  தலைநகர் டோக்கியோ சென்றுள்ள பிரத மர் நரேந்திர மோடி இந்தியாவின் வளர்ச்சி க்கு ஜப்பானின் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்துள்ளார். இந்தியா - ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய அவர், இந்தியா வின் வளர்ச்சியில் ஜப்பான் எப்போதுமே ஒரு முக்கிய நண்பனாக இருந்து வருகிறது.  மெட்ரோ ரயில், குறைக் கடத்திகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என ஒவ் வொரு துறையிலும் இரு நாடுகளுக்கு இடையேயான வளர்ச்சி கூட்டு நம்பிக்கை யின் அடையாளமாக மாறியுள்ளன என்றார். மேலும், ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 30 பில்லி யன் டாலர்கள் வரை தனியார் நிறு வனங்கள் முதலீடு செய்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.