தொட்டாலே உதிர்ந்து விழும் குடியிருப்பு வீடுகள்
நாமக்கல், ஆக. 4 – பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலாம்பாளையம் பேரூராட்சிக் குட்பட்ட அன்னை சத்யா நகரில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புக ளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு, முன் னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்க ளால் திறந்து வைக்கப்பட்ட இந்தக் குடியிருப்புகளில் 920 வீடுகள் உள் ளன. விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். ஆனால், தற் போது பல வீடுகளின் சுவர்களிலும், தூண்களிலும் விரிசல்கள் ஏற்பட்டுள் ளன. சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் வெறும் கையால் தட்டி னாலே சிமெண்ட், உதிரி கற்கள் கொட்டுவதாகவும் தெரிவிக்கின்ற னர். சமீபத்தில், ஒரு மூதாட்டி வீட்டின் வெளியே அமர்ந்திருந்தபோது, மேலே இருந்து கனமான சிமெண்ட் துண்டு ஒன்று கீழே விழுந்து, அவரது பிளாஸ்டிக் நாற்காலியை உடைத் தது. நல்லவேளையாக, மூதாட்டி அங்கிருந்து விலகிவிட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இது போன்ற சம்பவங்களால், மக்கள் இரவு நேரங்களில் பயத்துடன் உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. குடியிருப்பு கட்டிடம் கட்டிய ஒப் பந்ததாரர்கள், திறப்பு விழாவுக்குப் பிறகு ஒருமுறைகூட பராமரிப்பு பணி களை மேற்கொள்ளவில்லை எனப் பொதுமக்கள் கூறுகின்றனர். செம்பரம்பாக்கம், மேடவாக்கம் போன்ற இடங்களில் தரமற்ற கட்டி டங்கள் இடிந்து விழுந்ததுபோல, இங்கும் ஒரு அசம்பாவித சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே அரசு உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசும், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் உடனடியாக இந்தக் குடியிருப்புகளை ஆய்வு செய்து, கட்டிடங்களின் உறு தித்தன்மையைச் சோதிக்க வேண் டும். பராமரிப்பு அல்லது புதுப்பிப்பு கட்டிடங்கள் பராமரிப்புக்கு உகந் ததாக இருந்தால், உடனடியாக மரா மத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தால், புதிய குடி யிருப்புகளைக் கட்டிக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். அரசு உட னடியாகத் தலையிட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண் டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.