tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

வாழை மரங்கள் சேதம்

பாபநாசம், செப்.27 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளியன்று ஒரு மணி நேரத்திற்கு மேல் காற்று டன் கூடிய மழை பெய்தது.  இதில் பனை மரத்தின்  மட்டைகள் கீழே விழுந் தன. முருங்கை மரத்தின் கிளைகள் முறிந்தன. ஆங்காங்கே வாழை மரங்கள் சாய்ந்தன. அய்யம் பேட்டை அருகே கணபதி  அக்ரஹாரத்தில் முன் னோடி விவசாயி ஜெய்சங்க ரின் 400 ரஸ்தாளி வாழை மரங்கள் சாய்ந்தன. மழை, காற்றில் சாய்ந்த வாழை மரங்களுக்கு தமி ழக அரசு உரிய நிவா ரணம் வழங்க விவசாயி கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், செப்.27- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. பாபநாசம், இதன் சுற்று வட்டாரப் பகுதி யைச் சேர்ந்த 207 விவ சாயிகள் 26.08 குவிண் டால் பருத்தி எடுத்து வந்த னர். கும்பகோணம், பண் ருட்டி, செம்பனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 வணிகர்கள் பங் கேற்று, பருத்திக்கு அதிக பட்சம் ரூ.7,719, குறைந்த பட்சம் ரூ.6,956, சராசரி ரூ.6,699 என விலை நிர்ணயித்தனர். பருத்தி யின் மதிப்பு ரூ. 18,14,263.

குளம் தூர்வாரும்  பணி துவக்கி வைப்பு தஞ்சாவூர்

, செப்.27 - தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி பேரூராட்சி,  ஆத்தாளூர் மரியம்பீவி  அம்மா தர்கா அருகே உள்ள குளத்தை தூர்வா ரும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.  பேராவூரணி சட்டப்பே ரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து தூர்வாரும் பணியை துவக்கி வைத் தார். மெகா பவுண்டேசன் நிறுவனரும், வாட்டர் வாரியருமான நிமல் ராக வன் முன்னிலை வகித் தார். புழக்கத்தில் இருந்து, நீர் வரத்து வாய்க்கால் அடைபட்டதால், வறண்டு கிடக்கும் இக்குளத்தை, சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோளை ஏற்று, மெகா பவுண்டேசன் அமைப்பு சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி  தஞ்சாவூர்,

செப்.27 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரம் அம்மையாண்டி, செங்க மங்கலம் ஆகிய பகுதி  மக்கள் பயன்பெறும் வகை யில், செங்கமங்கலத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் நாடாளு மன்ற உறுப்பினர் ச.முர சொலி, பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் ஆகியோர் முகாமை துவக்கி வைத்துப் பேசினர். முகாமில், பட்டுக் கோட்டை வருவாய் கோட் டாட்சியர் சங்கர் மற்றும்  பலர் கலந்து கொண்ட னர்.  முகாமில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 466 மனுக்களை பொது மக்கள் அலுவலர்களிடம் வழங்கினர். மேலும், 8  மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கு ரூ.43 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

சித்தன்னவாசல் குடைவரை  கோவில் சுத்தம் செய்யும் பணி

புதுக்கோட்டை, செப்.27 - சுற்றுச்சூழலையும் இயற்கையையும் காப்பாற்றும் வகையில், தமிழ்நாடு அரசு புதுக்கோட்டை மாவட்ட  சுற்றுலா துறையும், மறு சுழற்சி பாதுகாவலர்களும் இணைந்து புகழ்பெற்ற சித்தன்னவாசல் குடைவரை கோவில் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மு.அருணா, மாவட்ட திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் காத்திக் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.  சந்தைப்பேட்டை பகுதியைச் சார்ந்த 13 மறுசுழற்சி பாதுகாவலர்கள் மற்றும் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி மாணவர்கள் 10 பேர், ரமணாஸ் கல்லூரி விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த மாணவிகள் 30  பேர், பஞ்சாயத்து தூய்மை காவலர்கள், மற்றும் குடைவரை கோவில் அலுவலக ஊழியர்கள் உட்பட 63 பேர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

மலைப் பகுதிகளில் பொது போக்குவரத்துக்கு வேன்களை இயக்க நடவடிக்கை: அமைச்சர்

அரியலூர், செப். 27- மலைப் பகுதிகளில் பொது போக்குவ ரத்துக்காக வேன்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “அரியலூர் மாவட்டம், வாரணவாசி அருகே மருதையாற்றில் தடுப் பணை கட்டி விவசாயிகளுக்கு பாசன வசதி செய்து தர வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக் கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், கடந்த 2024 ஆம் ஆண்டு அரியலூர் வந்த போது இதற்கான அறிவிப்பை வெளியிட் டார்.  இந்த திட்டத்துக்கு கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலே அரசாணை வெளி யிடப்பட்டு, அதன் பிறகு மதிப்பீடு தயாரிக்கப் பட்டு ரூ.24.30 கோடியில் நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட பச்சைமலையிலே உற்பத்தி யாகி இங்கு வருகிறபோது, இடையிலே பல  காட்டாறுகளும் சேர்ந்து மழைக்காலங்களில் பெரும் அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிற அந்தத் தண்ணீரைத் தேக்குவதன் மூலம் இந்தச் சுற்றுவட்டாரத்தில் இருக்கின்ற  400 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறு கிறது. மேலும், இப்பகுதியில் உள்ள 69 கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகளுக்குப் பெரும் உறுதுணையாக இருக்கும். மலைப் பகுதியில் வேன் இயக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே மாதிரி, பெரிய பேருந்துகள் இயக்க முடியாத இடங் களில், அதற்கான மாற்று என்ன செய்ய லாம் என்ற ஆய்வு நடைபெறுகிறது. அதற் கான அறிவிப்புகள் விரைவில் வெளி வரும்” என்றார்.

நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு

பாபநாசம், செப்.27- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச்  செயலர் சரவணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “செப்.28  முதல் அக்.27 வரை வ.எண்: 06012/11 நாகர்கோவில் - தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயிலுக்கு தற்போது முன்பதிவு  நடந்து வருகிறது. புறப்படும் நேரம் தாம்பரம் செல்வதற்கு (திங்கள் மட்டும்) தஞ்சாவூர்: காலை 06.26, பாபநாசம்: காலை 06.47, கும்பகோணம்: காலை  07.00, நாகர்கோவில் செல்வதற்கு (திங்கள் மட்டும்) கும்பகோ ணம்: இரவு 08.20, பாபநாசம்: இரவு 08.32, தஞ்சாவூர்: இரவு  09.15, தாம்பரம் - கும்பகோணம் / பாபநாசம் / தஞ்சாவூர்  வருவதற்கு மதியம்: 03.30 (திங்கள் மட்டும்), நாகர்கோவில் - தஞ்சாவூர் / பாபநாசம் / கும்பகோணம் வருவதற்கு இரவு:  11.15 (ஞாயிறு மட்டும்). வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப் புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.