பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் செய்யாறு கோட்டாட்சியரிடம் கோரிக்கை
திருவண்ணாமலை, அக்.14- ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள பட்டியலின மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டு மீண்டும் ஒப்படைப்பு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் செய்யாறு கோட்டாட்சி யரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக் குழு உறுப்பி னர் அப்துல் காதர் தலை மையில் செய்யார் கோட்டாட்சியர் அம்பிகா ஜெயினிடம் அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் திங்களன்று (அக்13) மனு அளித்தனர். இதில் மாவட்டச் செய லாளர் எஸ். ராமதாஸ், மாவட்டக் குழு உறுப்பினர் சுகுமார், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் கா.யாசர் அராபத், சிபிஎம் அருங்குணம் கிளைச் செயலாளர் அண்ணாமலை, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் செங்கேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த மனுவில், திரு வண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஒன்றியம், அருங்குணம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட எல்லை பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் பஞ்சமி தரிசு நிலங்களை கடந்த 1935 ஆம் ஆண்டு பட்டியலின மக்களுக்கு அரசாங்கம் ஒப்படை செய்யப்பட்டுள்ளது. அந்த பஞ்சமி நிலங்கள் இடைநிலை சாதியினரால் முறைகேடாக அப கரிக்கப்பட்டுள்ளது.தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் சார்பில் 16.6.2024 அன்று நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டதில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்தது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படை செய்திடுமாறு கடந்த ஆண்டு 30.09.2024 கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய தலைவர் பி.சீனிவாச ராவ் நினைவு நாளில் நேரடி யாக களப்போரட்டம் நடை பெற்றது. அதன் ஒரு பகுதியாக 7 ஏக்கர்பஞ்சமி நிலம் மீட்கப் பட்டது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் 4.10.2024 அன்று வந்தவாசி வட்டாட்சியரால் முதற்கட்டமாக மற்ற மீத முள்ள பயனாளிகளிடம் நேரடி விசாரணை நடத்தப் பட்டது என்றும், அதன் எழுத்துபூர்வமான அறிக்கை செய்யார் வருவாய் கோட்டாட்சியருக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்புக்கும் அனுப்புவதாக தெரி வித்தனர் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரையில் மேற்படி விசாரணை முடிவு சம்பந்தப்பட்ட பட்டியலின பயனாளிகளுக்கோ, தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பிற்கோ தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பட்டியலின மக்க ளுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டு ஒப்ப டைப்பு செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப் பிடப்பட்டுள்ளது.
