பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலை வழங்க கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஆக. 10- சிஐடியு திருச்சி மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்க 30 ஆவது மாவட்ட பேரவை, ஞாயிறன்று வெண்மணி இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் துவக்க உரையாற்றினார். கட்டுமான சங்க மாநிலக்குழு உறுப்பினர் துரைசாமி வாழ்த்துரை வழங்கினார். பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலை வழங்க வேண்டும். ஆன்லைன் பதிவை ரத்து செய்து, நேரடி பதிவை துவங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக கே. உலகநாதன், செயலாளராக பி. சந்திரசேகரன், பொருளாளராக பி. முருகன், துணைத் தலைவர்களாக கே. வெள்ளைச்சாமி, பி. வனஜா, துணைச் செயலாளர்களாக ஆர். வெங்கடேஸ்வரன், ஏ. சக்திவேல், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எம். செல்வமணி, ஜி. பச்சமுத்து, கே. குணசேகரன், பி. செந்தில்குமார், எம். அண்ணாமலை, எம். கோவிந்தராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முருகன் நன்றி கூறினார்.