tamilnadu

img

புதிய ஓய்வூதிய மசோதாவை ரத்து செய்திடுக! ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு போராட்டம்

புதிய ஓய்வூதிய மசோதாவை ரத்து செய்திடுக!  ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு போராட்டம்

விருதுநகர், அக்.,10- ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய ஓய்வூதிய மசோ தாவை திரும்பப் பெறக் கோரி விருதுநகரில் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பினர் வெள்ளியன்று போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசா னது,  புதிதாக கொண்டுவந்துள்ள ஓய்வூதிய மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.  8-வது ஊதிய குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அக்டோபர் 10  அன்று தில்லி யில்  தர்ணா போராட்ட நடைபெற் றது. இதனை ஆதரித்து நாடு முழு வதும் அனைத்து ஓய்வூதியர் சங்கங்கள் இணைந்து  போராட் டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், விருதுநகர் பி.எஸ்.என்.எல் தொலைபேசி அலு வலக வளாத்தில் நடைபெற்ற போ ராட்டத்திற்கு ஏஐபிடிபிஏ மாவட்டச் செயலாளர் கே.புளுகாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட  பொருளாளர் எம்.பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். கோ ரிக்கைகளை விளக்கி அதிகாரி கள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் கோவிந்தராஜ், நல சங்கத்தின் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் பேசினர். முடிவில் தபால்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சண்முக நாதன் கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமானோர் பங்கேற்ற னர்.    மதுரை  மதுரை மாவட்ட மத்திய,மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூ தியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு க்குழு சார்பில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தட்சிணா ரயில்வே ஓய்வூதியர் சங்கம் கோட்ட கன்வீனர் ஆர். கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். ஒருங் கிணைப்புக்குழு மாவட்ட தலை வர் வி. பிச்சைராஜன் மற்றும் பல் வேறு சங்க நிர்வாகிகள் பேசினர். அரசு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்க மாநில தலைவர் என்.ஜெய சந்திரன் நிறைவுரையாற்றினார். டிஆர்பியு கோட்ட செயலாளர் ஆர். சங்கரநாராயணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.