tamilnadu

img

பழுதடைந்த தொகுப்பு வீடுகளை செப்பனிடுக! பூவாணம் மக்கள் கோரிக்கை

பழுதடைந்த தொகுப்பு வீடுகளை செப்பனிடுக!  

பூவாணம் மக்கள் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 14-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூவாணம் ஊராட்சி பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன் தலைமையில், பூவாணம் எழில், நவநேசன், கஜேந்திரன், முத்துராஜ் மற்றும் பெண்கள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர்.  அந்த மனுவில், “சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூவாணம் ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித்தர வேண்டும். பட்டியல் இன மக்களின் சுடுகாட்டுக்கு சாலை அமைத்து தரவேண்டும். குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டி பழுது அடைந்துள்ளதை சீரமைத்து தரவேண்டும். ஆதி திராவிடத் தெருச்சாலையை செப்பனிட்டு தர வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கும்‌ கூட்டுறவு சங்கம் பயிர்க் கடன் வழங்க வேண்டும். பால் கூட்டுறவு சங்கம் அமைத்து கறவை மாடு கடன் வழங்க வேண்டும். பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை செப்பனிட்டுத் தர வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.  மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜூலை 25 அன்று பூவாணம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு, கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்புப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.