நேபாளத்தில் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்
காத்மாண்டு, செப்.14- நேபாளத்தில் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களை தியாகிகளாக அறி வித்துள்ளார் அந்நாட்டின் இடைகால பிரதமர் சுசீலா கார்க்கி. மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 10 லட்சம் நேபாள ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். நேபாளத்தின் ஏற்பட்ட பெரும் போராட்டம் பிரதமர் பதவி விலகலை தொட ர்ந்து இடைக்கால பிரதமாராக அந்நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரே பெண் நீதி பதியான சுசீலா கார்க்கிக்கு போராட்டக் குழுவினர் ஆதரவு தெரிவித்து தேர்ந்தெ டுத்தனர். இவர் செப். 12 வெள்ளியன்று ஜனாதிபதி ராம்சந்திர பௌடல் முன்னிலையில் பதவி யேற்ற பிறகு, போராட்டத்தில் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்களை செப். 13 அன்று சென்று சந்தித்தார். பிறகு செப் 14 ஞாயிறன்று காலை லெய்ஞ்சௌரில் உள்ள தியாகிகள் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்திய அவர் தனது பணிகளை துவங்கினார். பிரதம ரின் பிரதான அலுவலகம் தீவைக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டதால் அவரது அலுவலக பணிகள் உள்துறை அமைச்சக கட்டிடத்தில் துவங்கப்பட்டது. அதில் முதல் அறிவிப்பாக போராட்டத் தில் உயிரிழந்தவர்களை தியாகிகளாகவும் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண மும் அறிவித்தார். இந்தப் போராட்டங்களில் இதுவரை 59 போராட்டக்காரர்கள், 10 கைதிகள், மூன்று காவல்துறையினர்கள் என மொத்தம் 72 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.