tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீ காரம் வழங்குவது தொடர்பான தனியார் பள்ளிகள் இயக்கு நரின் பரிந்துரை மீது 12 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க  வேண்டும் என்று தமிழ்நாடு கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தமிழகத் தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கு வது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநர் கடந்த மார்ச்  மாதம் அளித்த பரிந்துரைகளை பரிசீலித்து தகுந்த உத்தரவு களை பிறப்பிக்க கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்து வதை உறுதி செய்யும் வகையில் ஆரம்ப பள்ளிகளை நடு நிலைப் பள்ளியாக உயர்த்துவது தொடர்பாகவும் வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்தி ரையன் முன் விசாரணைக்கு வந்த போது, 12 வாரங்களில்  தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி கல்வித்துறை செய லாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டில் கோவில்களில் வழிபாட்டு உரி மையை எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடி யாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை  நீதிபதி பி.புகழேந்தி ஆணை பிறப்பித்துள்ளார். இந்த  தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வரவேற்றுள்ளார். தமிழ்நாட்டை பொறுத்த வரை ஆலய நுழைவுப் போராட்டம் நீண்ட நெடிய வரலாறு  கொண்டதாகும் என்றும் கூறியுள்ளார்.

அதிமுகவை அடிமையாக்கும் அமித் ஷா

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனி சாமியின் தில்லி பயணம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகபாபுவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஒவ்வொரு முறை தில்லி பயணத்தி லும் வெளிப்படை தன்மை இல்லாமல் செல்வதாகவும், அதிமுகவை, அமித் ஷா அடிமையாக்கி விட்டதாகவும்” பதிலளித்தார்.

கமல்ஹாசன் ஆலோசனை

சென்னை: 2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில  சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் குறித்து மக்கள் நீதி  மய்யம் கட்சியின் கலந்தாலோசனை கூட்டம், வியாழக் கிழமை (செப்.18) சென்னையில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் செப்.21 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மண்டல வாரியாக  நடைபெறுகிறது

. செப்.20, 21-இல் திமுக பொதுக்கூட்டம்

சென்னை: ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தலைப்பில் செப்.20, 21 ஆகிய தேதிகளில் திமுக  சார்பில் பொதுக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. செப்.20-இல் காஞ்சிபுரம் வடக்கில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில்  டி.ஆர்.பாலு உரையாற்றுகிறார். திருவாரூரில் கே.என்.நேரு, கரூரில் திருச்சி சிவா, கோவை வடக்கில் ஆ.ராசா,  தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்  கூட்டத்தில் கனிமொழி எம்.பி., ஆகியோர் உரையாற்று கின்றனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை சப்பைக் கட்டு

சென்னை: “ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சின்னா பின்னமாக போய் விடக் கூடாது என்பதற்காக பாஜகவினர் காப்பாற் றினார்கள் என்ற சரித்திர  உண்மையை அக்கட்சி யின் பொதுச் செய லாளரே பதிவு செய்து உள்ளார். அந்தக் கருத்தை நான் வரவேற் கிறேன்” என்று பாஜக  முன்னாள் மாநிலத்  தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

விஜய்க்கு சரமாரி கேள்வி

சென்னை: தவெக  தலைவர் விஜய் பரப் புரைக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக் கோரி தவெக தொடர்ந்த  வழக்கில், “நிபந்தனை கள் அனைத்துக் கட்சி களுக்கும் விதிக்கப்படு வது தானே? தலைவ ராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப் படுத்த வேண்டும். தொண்டர்கள் உயர மான இடங்களில் ஏறி  நின்று ஏதாவது அசம்பா விதம் நடந்தால் யார்  பொறுப்பு? என்று  சென்னை உயர்நீதி மன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், கட்சி பிரச்சாரங்களின் போது ஏற்படும் இழப் பீட்டை வசூலிக்கும் வித மாக, ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில், நிபந் தனைகளை அனைத்து கட்சிகளுக்கும் பொருந் தும் வகையில் வகுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘தலையிட மாட்டாராம்’

சென்னை: எடப்பாடி பழனிசாமியிடம், அம முக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தொ டர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “அதிமுக உட்கட்சி விவகா ரத்தில் தலையிட மாட்டேன் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறிவிட்டார்”என்றார்.

இராமேஸ்வரம் மீனவர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

இராமநாதபுரம்: செப்.13 அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  இராமேஸ்வரம் மீனவர்கள்  7 பேர் இலங்கை கடற்ப டையால் கைது செய்யப் பட்டனர். இந்த மீன வர்கள் 7 பேருக்கும் இலங்கை நீதிமன்றம் 3  ஆவது முறையாக செப். 24 ஆம் தேதி வரை நீதி மன்றக் காவலை நீட்டித்து உள்ளது.