நட்பு நாடுகளை அணிதிரட்டி குரல் எழுப்புங்கள்! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்!
திருப்பூர், ஆக.10 - இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா நியாயமற்ற முறை யில் அதிகரித்திருப்பது பற்றி அமெரிக்க நிர்வாகத்துடன் உயர்மட்ட அரசுக் குழு பேச்சுவார்த்தை நடத்தி மறுபரிசீலனை செய்ய வலியுறுத்த வேண்டும். அதேசமயம், சர்வதேச அளவில் இந்தியாவுடன் இணைந்து செயல்படும் முக்கிய நாடுகளையும் சேர்த்துக் கொண்டு உலக வர்த்தக அமைப்பில் இந்த நியாய மற்ற வரி திணிப்புக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதி யாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக டீமா தலைவர் எம்.பி. முத்துரத்தினம் விடுத்திருக்கும் அறிக்கை யில் கூறியிருப்பதாவது: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்திய வர்த்தகத்திற்கு 50 சதவிகிதம் என செங்குத்தாக வரியை உயர்த்தி இருப்பது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இந்த வரித் திணிப்பு முக்கிய ஏற்றுமதி துறைகளான ஜவுளி, ஆட்டோமொபைல், மருந்துத்துறை என நமது பொருளாதாரத்திற்கும், பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்திற் கும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த நிலை யில், இந்திய அரசு இந்திய தொழில்களை யும், குறிப்பாக ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர் மற்றும் உற்பத்தித் துறையையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக, இந்த வரி உயர்வினால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர், உற்பத்தி யாளர்களுக்கு கடன் தவணை காலத்தை நீடிக்க வேண்டும். கடனுக்கான வட்டி விகி தத்தைக் குறைக்க வேண்டும். பிணை இல்லாமல் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு புதிய கடன் வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரியை தற்காலிகமாக நிறுத்து வதுடன், வருமான வரி உள்ளிட்ட மற்ற இனங் களையும் நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்றுமதியாளர்களின் ஊக்கத் தொகை தொடர்பாக நிலுவையில் இருக்கும் விண்ணப் பங்களை விரைந்து பரிசீலித்து ஊக்கத் தொகை வழங்குவதுடன், டிராபேக் விகி தத்தையும் உயர்த்த வேண்டும். ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, தெற்காசிய நாடுகள் மற்றும் யுரேஷியாவில் புதிய சந்தை வாய்ப்பைக் கண்டறிய சிறப்பு ஊக்குவிப்புத் திட்டத்தை அமலாக்க வேண்டும். புதிதாக வளர்ந்து வரும் பொரு ளாதார நாடுகளுடன் சந்தை தொடர்பான வர்த்தக உடன்பாட்டை நிறைவேற்ற வேண்டும். அத்துடன் அமெரிக்க நிர்வாகத்துடன் உயர்மட்ட அரசுக் குழு பேச்சுவார்த்தை நடத்தி, வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்த வேண்டும். அத்துடன் சர்வதேச அளவில் இந்தியாவுடன் இணைந்து செயல்படும் முக்கிய நாடுகளையும் சேர்த்துக் கொண்டு உலக வர்த்தக அமைப்பில் இந்த நியாயமற்ற வரி திணிப்புக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியிருக் கிறார்.