மூடப்பட்ட வடிகால் வாய்க்கால்கள் தலைச்சங்காடு பகுதி குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழைநீர்
மயிலாடுதுறை, அக்.15 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், ஆக்கூர் அருகேயுள்ள தலைச்சங்காடு பகுதியில் வடிகால்களை மூடியதால் மழைநீர் வடிய வழியின்றி குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் முதல் நாகை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலை யில் நிலங்களை, குடியிருப்புகளை இழந்த விவசாயிகள், அப்பாவி மக்களுக்கு முறையான இழப்பீடும், வசிப்பதற் கான மாற்று இடமும் இதுவரை சரிவர வழங்கப்படவில்லை. இந்நிலையில் மழை, வெள்ள நீர் விவசாய நிலங்கள் மற்றும் தெருக்கள் வழியாக வடிவதற்காக இருந்த ஏராளமான வடிகால், வாய்க்கால்களை அடைத்து விட்டதால், மழைநீர் வடிய வழியின்றி குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கி யுள்ளது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழை யால் தலைச்சங்காடு நேரு நகர், பண்டாரவடை பகுதி களில் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து காணப்படு கிறது. மழை நீரை அகற்றுவதற்கான முறையான ஏற்பாடுகளை வருவாய்த்துறை செய்யவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சாலை அமைக்கும் போதே வடிகால் வாய்க்கால்களை மூடக் கூடாது என வலியுறுத்தியும், அதிகாரிகளின் அலட்சி யத்தால் தற்போது தலைச்சங்காடு கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிய வழியில்லாமல் போய்விட்டது. உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சி யர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
