சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்: வடிகால்களை தூர்வாரும் பணி தீவிரம்
நாமக்கல், செப்.11- நாமக்கல் மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் பெய்த கனமழை யால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. இதையடுத்து சாலையோரம் உள்ள மழைநீர் வடி கால்களை தூர்வாரும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் திருச் செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட் டாரப் பகுதிகளான கூட்டப்பள்ளி, தோக்கவாடி, கொல்லப்பட்டி, குமார மங்கலம், சீதாராம்பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் புதனன்று ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்று டன் கனமழை பெய்தது. நகரப் பகு தியில் பலத்த காற்று வீசியதால், தமி ழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று அதிமுக வினர் வைத்திருந்த பேனர்கள் சரிந்து சாலையில் விழுந்தது. அப்போது எவ ரும் வராததால் விபத்து தவிர்க்கப் பட்டது. மேலும், திருச்செங்கோட்டில் மேடான பகுதிகளிலிருந்து வழிந்து வரும் மழைநீர், ஸ்டேட் பேங்க் சாலை, சங்ககிரி சாலைப் பகுதிகளில் ஆறு போல் ஓடியது. இதில் வாகனங் கள் தடுமாறியபடி மெதுவாகவே சென்றன. பள்ளிகள் கல்லூரிகள் விடும் நேரம், வேலைக்கு சென்ற வர்கள் வீடு திரும்பும் நேரத்தில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வியாழனன்று மழைநீர் வடிகால்களை தாண்டி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத் தற்கான காரணம் என்ன என்பது குறித்து நகர்மன்றத் தலைவர் தலை வர் நளினி சுரேஷ்பாபு தலைமை யில் அதிகாரிகள் ஆய்வு செய்த னர். இந்த ஆய்வின் போது, பிளாஸ் டிக் குடிநீர் பாட்டில்கள், மது பாட் டில்கள் ஆகியவற்றை கழிவுநீர் கால் வாய்களுக்குள் தூக்கி எறியப்படு வதால், அவைகள் சாக்கடைகளில் அடைத்துக் கொண்டு வடிகால் நீர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இதன் காரணமாக ஒரு மணி நேரம் பெய்த மழையில் மேலான பகுதிகளில் இருந்து தாழ் வான பகுதிகளை நோக்கி மழைநீர் பாய்ந்துள்ளது. இதையடுத்து வடி கால்களை தூர்வாரி சுத்தம் செய்ய நகர்மன்றத் தலைவர் உத்தரவிட் டார். அதன்பேரில், நகராட்சிப் பணியா ளர்கள் ஜேசிபி உதவியுடன் கால் வாய்களை அடைத்துள்ள பிளாஸ் டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து நகர்மன்றத் தலை வர் கூறுகையில், திருச்செங்கோடு நகரத்தில் சுமார் 33 மில்லி மீட்டர் அள விற்கு மழை பெய்துள்ளது. அதிக ளவு மழை பெய்தாலும் மழைநீர் வடியக் கூடிய வகையில் கட்டமைப்பு உள்ளது. நகராட்சிப் பணியாளர்களி டம் குப்பைகளை தரம் பிரித்து ஒப்ப டைக்க வேண்டும். அவ்வாறு செய் யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.