tamilnadu

img

கீழ்வேளூரில் மழை பாதிப்பு: நாகைமாலி எம்எல்ஏ ஆய்வு

கீழ்வேளூரில் மழை பாதிப்பு: நாகைமாலி எம்எல்ஏ ஆய்வு

நாகப்பட்டினம், அக்.22 - மழையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளை கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி புதன்கிழமை பார்வையிட்டார்.  அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சாகுபடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி கிடப்பதை நேரில் சென்று பார்த்து, அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்த பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பிரச்சனை குறித்து பேசினார். அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இப்பகுதியில் மீண்டும் மழை நீடித்தால் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும்  அபாயம் ஏற்படும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நெல் கொள்முதல் நிலையங்களில், தேங்கி கிடந்த நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டன.  சட்டமன்ற உறுப்பினருடன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சித்தார்த்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வடிவேல் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஜோதிபாசு ஆகியோர் உடனிருந்தனர்.