tamilnadu

img

கருப்புப் பெட்டிய பரண்ல போடுங்க!

கருப்புப் பெட்டிய பரண்ல போடுங்க! மூரா

உத்தரத்தில் ஏதோ தேடி ஒரு பழைய கருப்புப் பெட்டியை கீழே இறக்கினார் தாத்தா.... சனியனே கீழ விழுந்து காலு கையி ஒடிஞ்சா யாரு..பாப்பா..பாட்டி பொருமித்தள்ளினாள் உள்ளே நுழைந்த பிளஸ் டூ பேராண்டி...பாட்டி சொன்னா கேளு தாத்தா...ஏங்கிட்ட சொன்னா..நான் எடுத்துக்குடுக்கமாட்டேனா... ஏலே..சும்மா இருலே...நா விழுந்தா தூக்கிப் போட்டு புதைச்சிருவாய்ங்க... நீ விழுந்தா...உங்கம்மா..என்னைய தூக்கிபோடுற வரைக்கும் தூத்தியே கொன்றுவாளே...தாத்தா முனுமுனுக்க...சனியனே ...வாயவச்சுக்கிட்டு சும்மாருக்கமாட்டியா...கிடைக்கிற சோத்தில மண்ணப்போட்டுறாத....என்று கத்தினாள் பாட்டி சும்மாருக்க மாட்டிகளா...என்னத்தூக்கி வளத்த உங்கள நான் காப்பாத்துவேன் பாட்டி... தாத்தா அந்த கருப்புப் பெட்டில அப்படி என்ன இருக்கு.. அதா...அதுலதாண்டா நம்ம பரம்பர உம்மையே இருக்கு... தாத்தா....அகமதாபாத்தில விழுந்து வெடிச்ச போயிங் விமானத்தோட கருப்புப் பெட்டியே பொய் சொல்லுதாம்....பைலட் மேல தப்புனு.... இந்தக்கருப்புப் பெட்டில..அப்பிடி என்ன உண்மையிருக்கு... எதையோ தேடி எடுத்த தாத்தா..இந்தாருக்கில....ஒரு பழைய இத்துப்போன நோட்ட தூசி தட்டி ...இந்தா இதுலதான்...இந்த சாதகக்குறிப்புலதான் எங்க அப்பனோட பிறந்த நட்சத்ரம்..நாளு...இடம் எல்லாமே இருக்கு... இப்ப எதுக்குத் தாத்தா.. இதெல்லாம்... எலே டீ.வி.பாக்கையா இல்லையா....அடுத்து தேர்தல் வருது..ஓட்டுப்போடனும்ல.. தாத்தா...நீயெல்லாம் உன் வயசுக்கு பத்து தடவையாவது ஓட்டுப்போட்டுருப்பேல...ஆதாரு..வாக்களர் அட்டையிருக்கில அது போதும்.. எலே...ரமேசு..பதினஞ்சு தடவ போட்டவைனேயே..இனி போடக்குடாதுன்னுட்டாய்ங்களாமே... பாட்டி செருமிக்கிட்டே...யோவ் லூசு... இந்தா..கொடிபுடிச்சுக்கிட்டு போராட்டம் மறியலு...செயிலுன்னு போகுமே...நம்ம மாவுவிக்கிற பாண்டி...அந்த புள்ள சொல்லுச்சுயா....இந்த சாயுபு..மாதா ஏசப்பா கும்பிடுறவக...சேரிக்காரவக.....இவக எல்லாம்..இந்த மாட்டக்கும்பிட்டுட்டு..மனுசனக் கொல்லுவாய்ங்களே..அதான் அவிங்களுக்கு அவுக ஓட்டுப்போட மாட்டகன்னு..அவுக பேரப்பூராம் எடுக்க ரோசனை பண்ணி இப்பிடிச் செய்றாய்ங்களாம்...தூ...வெத்தல எச்சிலை வெளியில் துப்பினாள்பாட்டி... இவிங்க கனவு பலிக்காது பாட்டி...தாத்தா கருப்புப் பெட்டிய பத்திரமா பரண்ல போடுங்க...ஓட்டுப் பெட்டியில. கவனமா போடுங்க.... பேட்டை தூக்கிக்கொண்டு வெளியில் ஓடினான் ரமேஷ்...