புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் நிறைவு
புதுச்சேரி, ஆக. 8 - புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் 12 நாட்கள் நீடித்த வேலை நிறுத்த போராட்டம் முதலமைச்சர் ரங்க சாமியின் உறுதிமொழியின் பேரில் திரும்ப பெறப்பட்டது. புதுச்சேரி அரசு பேருந்து கழகமான பி.ஆர்.டி.சி., சாலை போக்குவரத்து கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநர்கள், நடத்துநர்களை, பணி நிரந்தரம் செய்யக் கோரியும், நிரந்தர ஊழியர்கள் 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த ஜூலை 28 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு அரசு ஊழியர் சம்மேளனம் ஆகியவை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு தீர்க்க வேண்டும் என்று தொடர்ந்து புதுச்சேரி அரசை வலியுறுத்தி வந்தது. முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை( ஆக.9) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சட்டமன்ற உறுப்பினர் நேரு, போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சாலை போக்குவரத்து கழக தற்காலிக ஊழியர்களுக்கான மாத ஊதியம் ரூ. 16,786 இருந்து, கூடுத லாக ரூ. 10 ஆயிரம் உயர்த்தி வழங்கப் படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதி யளித்தார். அதேபோல் நிரந்தர ஊழி யர்களுக்கு பஞ்சப்படியை முதல்கட்டமாக 25 விழுக்காடு இருந்து படிப்படியாக 49 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். முதல்வரின் உறுதியை ஏற்றுக் கொண்ட தொழிற்சங்க தலைவர்கள், வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளை இயக்குவதாக தெரிவித்தனர்.