tamilnadu

img

கழிவு நீர் சாலையில் ஓடுவதைக் கண்டித்து பொதுமக்கள் மறியல்

கழிவு நீர் சாலையில் ஓடுவதைக்  கண்டித்து பொதுமக்கள் மறியல்

தஞ்சாவூர், செப். 16-  தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில், புதை சாக்கடை கழிவு நீர் சாலையில் ஓடு வதைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வா யன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தஞ்சாவூர் மாநகராட்சி, 20 ஆவது வார்டு சீனிவாசபுரம் பகுதியில் ராஜன் சாலை,  காமராஜ் சாலை உள்ளிட்ட இடங்களிலுள்ள  புதை சாக்கடை ஆள்நுழைவு குழாய்களி லிருந்து 6 மாதங்களாக கழிவு நீர் வெளியேறி  சாலையில் ஓடுகிறது. மேலும் பல இடங்களில்  கழிவு நீர் தேங்கி நிற்பதால், அப்பகுதி களில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அச்சம் நிலவுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கு மாறு 20 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.சரவணன் மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கா ததைக் கண்டித்து, சீனிவாசபுரம் ராஜன் சாலையில், மாமன்ற உறுப்பினர் சரவணன் தலைமையில், மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கே.மணிகண்டன் உட்பட பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறிய லில் ஈடுபட்டனர்.   தகவலறிந்த காவல் துறையினர், மாநக ராட்சி அலுவலர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஓரிரு நாளில் புதை சாக்கடையில் கழிவு நீர் வழி வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என அலுவலர்கள் உறுதியளித்தனர். இதைத்  தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.