tamilnadu

img

இடிந்த பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

இடிந்த பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க  பொதுமக்கள் கோரிக்கை

பாபநாசம், ஆக. 29-  தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, அம்மாபேட்டை ஒன்றியம் வையச்சேரி ஊராட்சியைச் சேர்ந்த புண்ணியநல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் மேற்கூரை, கடந்த ஓராண்டுக்கு முன்பு, இடிந்து பள்ளி வகுப்பறையின் உள்ளேயே விழுந்துவிட்டது. இதனால், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் படிக்க முடியாமல், சமைய லறையில் உட்கார்ந்து படித்து வருகின்றனர். 120 மாணவ-மாணவியர் படித்து வந்த இப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி இல்லை. இதனால் தற்போது, இந்த பள்ளியில் ஒரு ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், 10 மாணவர்கள் படித்து வருகின்றனர்.  பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அடிப்படை வசதி இல்லாததால், இப்பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படிப்ப தற்காக அய்யம்பேட்டை செல்கின்றனர்.  இதில் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை உரிய கவனம் செலுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.