tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு; ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு; ஆர்ப்பாட்டம்

உடுமலை, அக்.15- தொடர் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வூதியர்களுக்கு ஆதரவு தெரிவித்து, உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நியாமாக வழங்க வேண்டிய பணப் பலன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, போக்குவரத்து தொழிலாளர் கள் மற்றும் ஓய்வுபெற்றோர்கள் கடந்த 59 நாட்களாக காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து, புதனன்று உடு மலை மத்திய பேருந்து நிலையம் முன்பு  சிஐடியு ஆட்டோ சங்கம், பஞ்சாலை, இன்ஜினியரிங் உள்ளிட்ட சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ சங்க செயலாளர் ஜஹாங்கீர் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் சிவராமன், தலைவர் தண்ட பாணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம், பஞ்சாலை சங்க மாவட்டத் தலைவர் ஈஸ்வரசாமி, செயலாளர் செல்வராஜ், போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி விஸ்வநாதன், மோட்டார் சங்க நிர்வாகி சுதா சுப்பிரமணியம், சிபிஎம் நகரக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், தோழன்ராஜா, வசந்தி, பார்த்திபன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.