குடியிருக்க இடம் கேட்டு 5 ஆவது நாளாக போராட்டம்
மயிலாடுதுறை, செப்.27- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள கேசவன்பாளையம் கிராமத்தில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் குடியிருக்க இடம் கேட்டு 5 ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடர் காத்திருப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜ், மாவட்டத் தலைவர் டி.சிம்சன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் தாமு. இனியவன், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் நெப்போலியன், கமல், சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.விஜய், மாவட்டச் செயலாளர் சி.மேகநாதன், தமிழக நிலம், நீர் பாதுகாப்பு இயக்கத்தின் விஷ்ணு, உழைக்கும் விவ சாயிகள் இயக்கத்தின் நெல்சன் உள்ளிட்டோர் ஆதரவு தெரி வித்தனர்.
