tamilnadu

img

திருவில்லிபுத்தூர் வ.புதுப்பட்டியில் தீண்டாமைச் சுவர் அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர் வ.புதுப்பட்டியில்  தீண்டாமைச் சுவர் அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், செப்.24- வத்திராயிருப்பு வட்டம்,  வ.புதுப்பட்டி பேரூராட்சி யின் 5 மற்றும் 6 ஆம் வார்டு  பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ள தீண்டாமைச்  சுவரை அகற்றக் கோரி, தமிழ்  நாடு தீண்டாமை ஒழிப்பு முன்  னணி மற்றும் அகில இந்திய  விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் செப்டம்பர்  24 ஆம் தேதி வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு கன்வீனர் ஜெயக்குமார், ஊர் நிர்வாகிகள் தலைமை தாங்கினர். சமூக ஆர்வலர் பிரகாஷ் முன்னிலை வகி த்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் லட்சுமி, மாவட்ட செய லாளர் முருகன், பொருளா ளர் பரமேஸ்வரன், அகில  இந்திய விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் உள் ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் நாகராஜ் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினார். சுந்தர லிங்கம், பழனிச்சாமி, ஜீவா னந்தம், ராபர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடி வில், வட்டாட்சியரைச் சந் திக்க போராட்டக்காரர்கள் அலுவலகத்திற்கு சென்ற னர். ஆனால் சுவர் எந்த நிலத்  தில் அமைந்துள்ளது என் பதை அதிகாரிகள் விளக்க மறுத்ததுடன், வட்டாட்சியர் வருகை தராததால் உரிய பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி புதுப்பட்டியில் தீண்டாமைச் சுவரை அகற்றும் போரா ட்டம் நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது.