குடிமைனைபட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்
சிதம்பரம், செப்.26- பரங்கிப்பேட்டை ஒன்றியப் பகுதியில் குடி யிருந்து வரும் வீடுகளுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வயலாமூர், பெரியகுமட்டி, பாரதி நகர் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், ஏழை மக்க ளுக்கு உடனடியாக மனை பட்டாவை வழங்க வலியுறுத்தியும் கொத்தட்டை பழங்குடி மக்களுக்கு சுடுகாட்டு பாதை அமைத்துக் கொடுக்க வேண்டியும், கணக்கம்பாளையம் சண்முகா நகரில் பழங்குடியினருக்கு வழங்கிய குடிமனை பட்டாவை அளந்து கொடுக்க வேண்டும், அனைத்து மணல் குவாரிகளையும் ஆய்வு செய்து சட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.விஜய் தலைமை தாங்கி னார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகர செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசீலன், மண்டல பொருளாளர் ஹசன்முகமது மன்சூர், ஒன்றியக் குழு உறுப்பினர் கோபிநாத், கிளை செயலாளர்கள் அஞ்சம்மாள், துர்கா, முத்துப்பாண்டி, வெங்கடேசன், பரசு ராமன், ராமர், சின்னதுரை, சீனு, வைலா மூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். இதனைதொடர்ந்து, புவனகிரி வட்டாட்சியர் அன்பழகன் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது, பாரதி நகர் பகுதியில் குடி யிருக்கும் 110 குடும்பத்தினருக்கு இலவச மனைப் பட்டா வழங்க அளவீடு செய்யப்பட்டு உட்பிரிவு கோப்பு தயார் செய்ய வருகிறது என்றும், ஒரு மாத காலத்திற்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கணக்கம்பாளையம் சண்முகா நகர் பழங்குடி மக்களுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டு அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்ற கோரிக்கைகளையும் உடனடியாக நிறை வேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக வட்டாட்சியர் எழுத்து பூர்வமாக உறுதி அளித்தார். இதனை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.