தலைமை செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாட்டில் முதல்வர் மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து, தீர்வு நடவடிக்கை சிறப்பாக மேற்கொண்டதில் 2022-ம் ஆண்டில் மாநில அளவில் 2-ம் இடம் பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.உடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அமைச்சர்கள் உள்ளனர்.