புதுக்கோட்டை, பிப்.26 - முதுநிலை கால்நடை மேற்பார்வை யாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென தமிழ்நாடு முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம் சனிக்கிழமை புதுக் கோட்டையில் நடைபெற்றது. பேர வைக்கு சங்கத்தின் மாநில தலைவர் வி.சண்முகம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் எஸ்.வேலுச்சாமி முன்னிலை வகித்தார். பொதுச் செய லாளர் கே.குமரேசன், பொருளாளர் கு.குமரேசன் ஆகியோர் அறிக்கையை முன்மொழிந்து பேசினர். பேரவையில் பிரதம மருத்துவர் எஸ்.எஸ்.அரசு சிறப்புரையாற்றினார். தோழமைச் சங்க நிர்வாகிகள் ஆர்.பிரபு, சி.அழகிரி, ஆ.முத்துராஜா, கரு.முத்துச்சாமி, ப.யோகேஸ்வரன், ஏ.முத்துக்குமார், ஆர்.ரெங்கசாமி, எஸ்.ஜபருல்லா, ரமா ராமநாதன், பெ.அன்பு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் பொதுச் செயலாளர் சி.எஸ்.நடராஜன் நிறைவுரையாற்றினார். தீர்மானங்களை பி.இளங்கோவன், நா.பானு ஆகியோர் முன்மொழிந்தனர். முன்னதாக இணைச் செயலாளர் வி.சுப்பிரமணியன் வரவேற்க, அமைப்புச் செயலாளர் த.கருணாநிதி நன்றி கூறினார். முதுநிலை கால்நடை மேற்பார்வை யாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக நிரப்ப ப்படாமல் உள்ள காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். வேலைப் பளுவின் அடிப்படையிலும், நலத்திட்ட ங்களை செயல்படுத்த வேண்டும் என்பதைக் கணக்கில் கொண்டும் முது நிலை மேற்பார்வையாளர் பணியி டங்களை அதிகப்படுத்த வேண்டும். விடுபட்டுப் போன அனைவருக்கும் ஆபத்து ஈட்டுப்படியையும், தனி ஊதியத் தையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.