மிதிவண்டி போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்
மயிலாடுதுறை / கரூர், செப்.27 - அறிஞர் அண்ணா பிறந்தநாளை யொட்டி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கான பரி சளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் தொடங்கி ஏ.வி.சி. கல்லூரி வழியாக மாவட்ட ஆட்சியர் வளாகம் வரை 15 கி.மீ. தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு ஆறு பாதி மதகடி அங்கன்வாடியில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வளாகம் வரை 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வய திற்குட்பட்ட மாணவர்களுக்கு செம்பனார் கோவில் கலைமகள் பள்ளியில் தொடங்கி ஏ.வி.சி. கல்லூரி வழியாக மாவட்ட ஆட்சியர் வளாகம் வரை 20 கி.மீ. தூரமும், 15 வய திற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாண வியர்களுக்கு செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் தொடங்கி ஏ.வி.சி. கல்லூரி வழியாக மாவட்ட ஆட்சியர் வளாகம் வரை 15 கி.மீ. தூரம் வரை நடைபெற்றது. மேற்படி போட்டிகள் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இப்போட்டியில் 60 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி யினை கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டியனாது, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் துவங்கி கரூர் - திண்டுக்கல் ரோடு, மாவட்ட ஆட்சியரகம், வெங்கக்கல் பட்டி பாலம், லிட்டில் ஃபிளவர் பள்ளி ஆர்ச், மணவாடி பாரத் பெட்ரோல் பங்க் வரை சென்று திரும்பி, ஆஸ்ரமம் பள்ளி, வெங்கக் கல்பட்டி பாலம், மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆர்ச் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்ற 60 பேருக்கும் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
