articles

img

மதச்சார்பின்மை சிந்தனை அசோகர் காலத்தியது! - சீத்தாராம் யெச்சூரி

மதச்சார்பின்மை சிந்தனை  அசோகர் காலத்தியது!

மனித நாகரீகம் பெற்றெடுத்த மகத்தான படைப்பாளிகளில் சிலர் கம்யூனிஸ்ட் கட்சிகளை அணுகுவதும் நடந்திருக்கிறது. அவர்கள் தாங்களாகவே முன்வந்து கம்யூனிஸ்ட் கட்சிகளிலும், அவை நடத்தும் போராட்டங்களிலும் பங்கு கொண்டிருக்கிறார்கள். தங்களின் கலைப் படைப்புகளில் மனித சாரமாகிய அந்த மனிதநேயம் இடம்பெற வேண்டும் என்கிற ஆவல்தான் அதற்குக் காரணம். சமுதாய இயக்கத்தின் தெளிவான வெளிப்பாடாக அவர்கள் காண்பது கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் வர்க்கப் போராட்டத்தையும் ஆகும். ஆக, கலைஞர்கள் படைப்பாளிகளுக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் இடையே இயங்கியல்ரீதியான தொடர்பு, கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது.

பிக்காசோ - ஒரு கம்யூனிஸ்ட் பிரபல ஓவியர் பிக்காசோவை நீங்கள்  அறிவீர்கள். அவர் தனது இறுதிக்காலம் வரை பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில்  உறுப்பினராக இருந்தார். ஆண்டுதோறும் கட்சி அலுவலகம் சென்று தனது உறுப்பி னர் பதிவை புதுப்பித்துக் கொள்வார். ஒரு முறை ஒரு நிருபர் கேட்டார். நீங்கள் ஏன்  இப்படிச் செய்கிறீர்கள்? பிகாசோ பதில ளித்தார். தாகமெடுத்த மனிதன் நீர் ஊற்றைத் தேடிப் போவதுபோல நான் கம்யூனிஸ்ட் கட்சியை நாடிப் போகிறேன். அக்பரின் புதிய நாள்காட்டி நோபல் பரிசு பெற்ற நமது பேராசிரியர்  அமர்த்தியா சென் “யுனெஸ்கோ ஆயிர மாண்டு உரை நிகழ்த்திய போது ஒரு  முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டி ருக்கிறார். இந்த ஆயிரம் ஆண்டிலிருந்து அடுத்த ஆயிரம் ஆண்டுக்குள் நுழையும்  வேளையில் மனிதக்குலம் எப்படி உள்ளது  என்று காண அவர் முயன்றுள்ளார். இதற்  காக அவர் இந்திய வரலாற்றைப் புரட்டிப்  பார்த்தபோது இந்தியாவின் சக்ரவர்த்தி யாக அக்பர் இருந்த காலத்தில் முஸ்லிம்  களின் ஹஜீரா நாட்காட்டியின்படி அப்போது ஒரு புதிய ஆயிரமாவது ஆண்டு  பிறந்திருக்கிறது. அதை மிகச் சிறப்பாக அவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி யாக சில புதிய கொள்கைகளை அக்பர்  அறிவித்திருக்கிறார். அதிலே ஒன்று:  “அரசு சகிப்புத்தன்மையைக் கடைப் பிடிக்கும். தான் விரும்புகிற மதத்தைப் பின்பற்ற ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கும்.  “ரோமன் நாட்காட்டியின்படி 1506  ஆம் ஆண்டில் இப்படி பிரகடனப்படுத்தி யிருக்கிறார். பல மதக் கோட்பாடுகளை ஒருங்கிணைத்து “தீன் இலாகி” என்கிற புதிய மதத்தை அக்பர் துவக்க விரும்பிய  காலமது. “தீன்தாரிகா” என்கிற புதிய நாட்காட்டியையும் பல காலங்களில் பல  நாட்காட்டிகளைப் பார்க்கத் தேவை யில்லாதபடி ஒரு புதிய நாட்காட்டியை யும் துவக்கி வைக்க அவர் அப்போது விரும்பினார். 400 ஆண்டுகளுக்கு முன்பே  இத்தகைய முயற்சிகள் நடந்திருக்கின் றன. இந்தியா பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடு, உலகில் எங்கும் இல்லாத படி பல தேசிய இனங்களை, மொழிகளை பண்பாடுகளை மதங்களை கொண்ட நாடு என்பது அக்பர் காலத்திலேயே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் அன்று கண்ட வழிகள்தாம் புதிய மதம். புதிய நாட்காட்டி. அசோகரின் பிரகடனம் சொல்லப்போனால், அக்பருக்கு வெகுகாலத்திற்கு முந்தியே, அதாவது அசோகர் காலத்திலேயே (கி.மு.300) இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனலாம். அசோகரின் அந்த மூன்று சிங்கங்கள் இந்  திய அரசின் இலச்சினையாக உள்ளது. அவை இருக்கும் அசோகரின் தூணில்  என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை நாம்  மறந்துவிட்டோம். அதிலே பாலி மொழி யில் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது:  ‘ஒவ்வொரு மனிதரின் உரிமையை யும். ஒவ்வொரு மத நம்பிக்கையையும் எனது அரசு பாதுகாக்கும் ‘ ஆக, கம்யூனிஸ்டுகள் இன்று கூறுகிற  மதச்சார்பின்மை என்பது மேற்குலகச் சிந்தனை அல்ல. கி.மு.300லேயே அத்த கைய சிந்தனை இந்த மண்ணில் எழுந்தி ருக்கிறது. அதாவது. ஐரோப்பாவில் முறை யான நாகரீகம் ஏற்படுவதற்கு முன்பே (ரோம சாம்ராஜ்யம் போன்றவை சில பகுதிகளில் இருந்தாலும்) இந்தியாவில் ஒவ்வொருவரும் தத்தமக்கு பிடித்தமான மதத்தைப் பின்பற்றலாம் என்கிற மதச்  சார்பின்மையை வளர்த்தெடுத்த பண்பாடு  இருந்திருக்கிறது. அசோகர் காலத்தி லேயே. அக்பர் காலத்திலேயே இருந்தி ருக்கிறது. கம்யூனிஸ்டுகளைப் போலி மதச்சார்  பின்மைவாதிகள் என்றும். இந்தியப் பாரம்பரியத்திற்கு சவால் விடுகிறார்கள் என்றும் மதவெறியர்கள் கூறுகிறார்கள். நாம் அவர்களுக்குச் சொல்லிக் கொள் வோம். இந்தியப் பாரம்பரியத்தை சீர ழிப்பது யார் என்றால் அது இவர்களே, மத வெறியர்களே. பல்வேறு கலாச்சா ரங்களுக்கிடையே கொடுக்கல் வாங்கல் நடைபெற்று அதன் மூலம் உருவான நாட்  டின் ஒற்றுமையை அழிக்க முனைபவர்கள்  மதவெறியர்களே.பாசிசபாணி ஒருமைத்தன்மை திணிப்பு  அதனால்தான். பலதரப்பட்ட பண்பாடு களின் சகவாழ்வு என்பது “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் தாரக மந்திரமாய் ஒலிக்கி றது. இத்தனை வகையான மொழிகளோ டும், தேசிய இனங்களோடும் திகழுகிற புது மையான ஒரு நாடு உலகில் வேறு எங்கும்  கிடையாது. இந்த நாட்டின் ஒற்றுமை பாது காக்கப்பட வேண்டுமானால் வேற்றுமை களுக்கு மத்தியில் இருக்கக்கூடிய பொது மைகளை பலப்படுத்துவதே அதற்கான ஒரே  வழி என்பதைப் புரிந்திருக்க வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒருமைத் தன்மையாக்குவதன் மூலம் ஒரு நாளும் ஒற்றுமையைப் பாது காக்க முடியாது. மதவெறியர்கள் செய்ய நினைக்கும் வேலை இதுதான். அவர்கள் ஒருமைத்தன்மையை, மதரீதியான ஒரு மைத்தன்மையை. சொல்லப்போனால் கலை யாக்கம் மற்றும் பண்பாட்டை நேரடியாக வும். மொத்தமாகவும் ஒழித்துக்கட்டுகிற பாசிச பாணியிலான ஒருமைத்தன்மையைத் திணிக்கப் பார்க்கிறார்கள். பன்முகப்பட்ட தன்மையானது நமது பண்பாட்டுத் துறையில் பல்வேறு நல்ல பாரம்பரியங்களையும், வளர்ச்சியையும் கொணர்ந்தது, இந்தியா போல வேறு  எங்கும் பண்பாட்டுத்துறையில் இத்தகையப்  பன்முகப்பட்ட செழிப்பைக் காண முடியாது.  ஆனால் இன்று நடப்பது என்ன? ஒருமைத்  தன்மையைப் புகுத்திட வியாபார ஆணைக்கு ஏற்ப சரக்கு உற்பத்தி செய்  யப்படுவது போல பண்பாட்டுத்துறைக்கும் ஆணையிடப்படுகிறது. சமஸ்கிருத ஆண்டு! கல்வி சீர்குலைக்கப்படுகிறது. வரலாறு  இவர்களின் வசதிக்கு ஏற்ப திருத்தப்படு கிறது. வரலாற்றுப் பாடம் சிதைக்கப்படு கிறது. சுலை இலக்கியத்தின் ஒவ்வொரு  பகுதிக்கும் மதவெறிச் சார்பு தரப்படு கிறது. கொடுமையிலும் கொடுமையாய், ஒரே யொரு மொழி மட்டும், ஒரேயொரு சிந்தனை  வழி மட்டும் வளர்த்தெடுக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு மொழிகளாய் விளங்கும் அந்தப் பன்முகத்தன்மை ஒழிக்கப்படுகிறது. மொழிகளின் சுதந்திரமான வளர்ச்சி தடுக் கப்படுகிறது. சமஸ்கிருத ஆண்டு அறிவிக்கப்பட் டுள்ளது. அரை நூற்றாண்டுக்குப் பிறகு இப்படியொரு முடிவு! அப்படியெளில் ஒவ்வொரு ஆண்டையும் ஒவ்வொரு மொழி  ஆண்டாகக் கொண்டாடுவார்களா? இந்த  மொழிகளைப் பல கோடி மக்கள் பேசு கிறார்கள். தமிழ் பேசும் மக்களின் எண் ணிக்கை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல  நாடுகளின் ஜனத் தொகையைக் காட்டிலும்  அதிகமாகும். எனவே நாட்டின் இந்த மொழி களை எல்லாம் கொண்டாடலாம். ஆனால், ஒரு மொழியை மட்டும் கொண்டாடுவதன் காரணம் என்னவென்றால் மதவெறி யர்களுக்கு உள்ள “ஒரு நாடு, ஒரு மக்கள், ஒரு பண்பாடு, ஒரு மொழி, என்கிற தவ றான சித்தாந்தமாகும். இந்தியாவின் பன்  முகத்தன்மையை ஒழித்துக்கட்டும் இத்த கைய ஒருமைத்தன்மையைப் புகுத்தவே மதவெறியர்கள் முனைந்துள்ளனர். குருஜாடா அப்பாராவ் எனும் புகழ்  பெற்ற தெலுங்கு கவிஞரின் பாடல் வரி களோடு எனது உரையை முடிக்க விரும்பு கிறேன். பிள்ளைப் பருவத்திலிருந்து நாங்கள்  கேட்ட வரிகள் அவை. எங்களின் மனசாட்சி யைத் தட்டியெழுப்பிய வரிகள் அவை: “தேசம் என்பது மண் அல்ல தேசம் என்பது மனிதர்களே!” (தேசமன்ட்டே மட்டிகாது; தேசமன்ட்டே மனிசிலே) இந்த மக்களைக் கண்டே நாடு பெருமிதம் கொள்கிறது. இந்த மக்களுக்கே நாம் சேவையாற்ற வேண்டும். வெற்றி பெற வேண்டிய அணி இந்திய மக்களுக்கான இந்த விரிந்த போராட்டத்தில் இணையுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் இருப்பிற்கும். எதிர்காலத் திற்கும் உயிர் நாடியான போராட்டம் இது.  தேசத்தை பின்னோக்கி இழுக்கவும், முன்னோக்கி நடத்திச் செல்லவுமான சித்தாந்தக் கயிறு இழுப்புப் போட்டி நடக்கிறது. முன்னோக்கி நடத்திச் செல்லும் அணி வெற்றிபெற வில்லையெனில் தேசம் தேங்கிப் போகும். வெற்றிபெற வேண்டிய ஒரே அணி அந்த அணிதான். இந்த விரிந்த போராட்டத்தில் நீங்கள் அனைவரும் உங்க ளின் அனைத்து வகை கலை ஆற்றலோடும்,  படைப்புத் திறமையோடும் பங்கு கொள்ள வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன். மகாகவி பாரதியின் முழக்கத்தை மன தில் கொள்வோம் : “வாழிய செந்தமிழ்! வாழ்க  நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு! - தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்  சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு கோவையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் சீத்தா ராம் யெச்சூரி நிகழ்த்திய உரையின் சுருக்கம்.