இந்த நீளம் போதுமா?
‘தல தோனி’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அவரை அழைப்பதுண்டு. அவர் வேறு மாநிலத்துக்காரராக இருந்தாலும், சென்னைக்காரரைப் போலவே அவரைப் பாவிக்கிறார்கள். தோனியின் வயதில் பெரும்பாலான கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ஓய்வு பெற்று விடுவார்கள். ஆனால், தொடர்ந்து ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடுவதோடு மட்டுமல்ல, நல்ல உடற்தகுதியுடன் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக தோனி இருக்கிறார். ஒரு ஆட்டத்தில் தனது இரு கால்களையும் அதிகபட்ச நீளத்திற்கு விரித்து, அவுட் ஆகாமல் தப்பித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அளித்தது. “இந்த நீளம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா” என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
டாப் டக்கர், கேரளம்..!
லண்டனில் இருந்து வெளியாகும் ரஃப் கைட்ஸ்(Rough Guides) ஒவ்வொரு ஆண்டும் கண்டிப்பாக சுற்றுலா செல்ல வேண்டிய இடங்களைப் பட்டியல் போடுகிறது. இந்த ஆண்டும் அந்தப் பட்டியலில் 26 இடங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள இடங்களில் கேரளா மட்டுமே அதில் இருக்கிறது. பயணங்களுக்கான 30 ஆயிரம் விசாரணைகளை ஆய்வு செய்து இதைத் தயாரித்திருக்கிறார்கள். மாரக்கேஷ், கிரெடி, பாலி மற்றும் டோக்கியோ என்று முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ள பட்டியலில் 16வது இடத்தை கேரளா பிடித்துள்ளது. பெருங்கடல், கடற்கரைகள், ஆறுகள், மலைகள், கிராமங்கள், பண்பாடு மற்றும் உணவு என்று அனைத்தையும் ஒரே இடத்தில் கேரளா தருகிறது என்று சுற்றுலாத்துறை நிபுணர்களில் ஒருவரான ஜோஸ் பிரதீப் மகிழ்வோடு குறிப்பிடுகிறார். நீர்வழிப் போக்குவரத்துக்காகவும், மலைகளுக்காகவுமே கேரளாவைத் தேர்வு செய்ததாகப் பல சுற்றுலாப்பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஓணம் பண்டிகையின்போது ஆலப்புழாவில் நீளப்படகுகள், பரம்பிக்குளம் புலிகள் காப்பகம், கோழிக்கோட்டில் களரிச்சண்டை பாடம், தென்மலாக் காட்டில் மரவீட்டில் இரவு உறக்கம், தெய்யம் சடங்குகள், மீன்பிடி என்று கருத்து தெரிவித்த பயணிகளின் பட்டியல் நீளுகிறது.
கல, கல குடும்பம்
உங்க வீட்டுல எல்லாரும் சூப்பர் ஸ்டார்.. உங்க அப்பா சிரஞ்சீவி, சித்தப்பா பவன் கல்யாண், தாய்மாமா பையன் அல்லு அர்ஜூன், நீங்களும் பெரிய ஸ்டாரு.. இவ்வளவு ஸ்டாரும் ஒரு நாள் ஒண்ணா உக்காந்து உணவு சாப்புடுறீங்க... அப்போ ஒரு ரசிகர் வர்றாரு... குழப்பம் வராதா.. யாரப் பாக்க வந்துருக்காருன்னு.. வரும்.. அதவிட ஒரு சிக்கல் இருக்கு.. அந்த நேரத்துல ஒரு இயக்குநர் வந்தா, அவர் யார புக் பண்ண வந்துருக்காருன்னு... - தெலுங்கு நடிகர் ராம் சரண்.
நாங்க புதுசா வந்த ஜோடிதானுங்க..
அருணாச்சலப் பிரதேசத்தின் திவாரிகாவ்ன் என்ற இடத்தில் இரண்டு புதிய வகை தவளைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அகலாப்யா என்ற ஆய்வு மாணவியின் ஆய்வின் ஒரு பகுதியான தேடுதலில்தான் இவை சிக்கியுள்ளன. இந்த ஆய்வுக்குழுவிற்கு தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிஜூ தலைவராக இருந்தார். அந்த மாநிலத்தின் நகரமான மெச்சுகாவின் பெயரை அந்தத் தவளை ஒன்றிற்கு வைத்தனர். பின்னர், மற்றொரு தவளைக்கு 2022 இல் மரணமடைந்த கேரள ஊடகவியலாளர் சோம்நாத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் குழுவினரோடு சோம்நாத் பயணிப்பது வழக்கமாம். இதுவரையில் யாரும் போகாத மலைக்காட்டுப் பகுதிகளில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக இக்குழுவினர் பயணித்துள்ளனர்.
டாப் டக்கர், கேரளம்..!
லண்டனில் இருந்து வெளியாகும் ரஃப் கைட்ஸ்(Rough Guides) ஒவ்வொரு ஆண்டும் கண்டிப்பாக சுற்றுலா செல்ல வேண்டிய இடங்களைப் பட்டியல் போடுகிறது. இந்த ஆண்டும் அந்தப் பட்டியலில் 26 இடங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள இடங்களில் கேரளா மட்டுமே அதில் இருக்கிறது. பயணங்களுக்கான 30 ஆயிரம் விசாரணைகளை ஆய்வு செய்து இதைத் தயாரித்திருக்கிறார்கள். மாரக்கேஷ், கிரெடி, பாலி மற்றும் டோக்கியோ என்று முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ள பட்டியலில் 16வது இடத்தை கேரளா பிடித்துள்ளது. பெருங்கடல், கடற்கரைகள், ஆறுகள், மலைகள், கிராமங்கள், பண்பாடு மற்றும் உணவு என்று அனைத்தையும் ஒரே இடத்தில் கேரளா தருகிறது என்று சுற்றுலாத்துறை நிபுணர்களில் ஒருவரான ஜோஸ் பிரதீப் மகிழ்வோடு குறிப்பிடுகிறார். நீர்வழிப் போக்குவரத்துக்காகவும், மலைகளுக்காகவுமே கேரளாவைத் தேர்வு செய்ததாகப் பல சுற்றுலாப்பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஓணம் பண்டிகையின்போது ஆலப்புழாவில் நீளப்படகுகள், பரம்பிக்குளம் புலிகள் காப்பகம், கோழிக்கோட்டில் களரிச்சண்டை பாடம், தென்மலாக் காட்டில் மரவீட்டில் இரவு உறக்கம், தெய்யம் சடங்குகள், மீன்பிடி என்று கருத்து தெரிவித்த பயணிகளின் பட்டியல் நீளுகிறது.
கொஞ்சம் சிரிங்க மேடம்..
இளம் விளையாட்டு சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினராக நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி வருகிறார் என்றவுடன் எல்லோர் ஆர்வமும் அதிகரித்தது. ஆனால் மேடைக்கு வந்ததில் இருந்து முகத்தை “உம்”மென்று வைத்துக் கொண்டார். விழா ஏற்பாட்டாளர் அருகில் வந்து சொல்லியும் சென்றார். சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கிறார்கள். நீங்கள் வாங்கும்போது எப்படி குதூகலமாக நிற்கிறீர்கள்.. இந்த இளம் சாதனையாளர்களும் சிரிக்க வேண்டாமா..? என்று இரண்டு படங்களையும் போட்டுள்ளனர். கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைக்காக பொதுவெளியில் இப்படியா நிற்பது என்று கட்சிக்காரர்களே முணுமுணுக்கிறார்கள்.