மழைக் காலத்தையும் வறண்ட காலத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளும் மரங்கள்
சில மரங்கள் வறட்சியால் அழிகின்றன. ஆனால் வேறு சில மரங்கள் உயிர் வாழ்கின்றன. இது ஏன்? நார்வே ஸ்ப்ரூஸ் (spruce) மரங்கள் அதிக அளவில் வறட்சியை உணரும் திறனை பெற்றுள்ளன. 2018 இல் ஜெர்மனியில் ஏற்பட்ட வறட்சியின்போது அவை பெருமளவில் அழிந்ததன் மூலம் இது உறுதிசெய்யப்பட்டது. நிலத்திற்கடியில் இருந்து கிடைக்கும் கடந்த கால அனுபவங்களை வைத்து அவை பாடம் கற்கின்றன. நார்வே ஸ்புரூஸ் மரங்களில் ஆய்வு நீண்ட வறட்சியை அனுபவித்த ஸ்புரூஸ் மரங்கள் நீரைச் சேமிக்க மரக்கவிகைகளை மாற்றிய மைத்து வருங்கால வறட்சியை சமா ளிக்க கற்கின்றன. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை தாவர உயிரியல் (Plant Biology) என்ற இதழில் வெளிவந்துள்ளது. சுவிட்சர்லாந் தின் பைன் மரங்கள் ஈரம் மிகுந்த சூழ்நிலையை தகவமைத்துக் கொள்கின்றன என்றாலும் வறண்ட காலத்தில் அவை பலவீனமடை கின்றன என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது. “மரங்கள் அபரிமிதமான நீர் கிடைக்கும் மழைக்காலத்தையும் பற்றாக்குறையாக இருக்கும் வறண்ட காலத்தையும் நினைவில் வைத்துக்கொள்கின்றன என் பதை இந்த ஆய்வுகள் வலியுறுத்து கின்றன. வெப்பம் மிகுந்த காலத்தி லும் ஸ்புரூஸ் மரங்கள் சூழ்நிலை யை திறனுடன் சமாளிக்கின்றன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. மரக் கவிகைகளின் அமைப்பை மாற்றி வறட்சியைச் சமாளிப்பது பற்றி கூறும் முதல் ஆய்வு இதுவே. எல்லா மரங்களும் காடு களும் காலநிலை மாற்றத்திற் கேற்ப தகவமைத்துக் கொள்கின் றன என்று இதற்கு பொருளில்லை. என்றாலும் மரங்கள் இம்மாற்றங்க ளுக்கு ஏதோ ஒருவகையில் பதில் வினை புரிகின்றன” என்று சுவிட்சர் லாந்து பாஸெல் (Basel) பல்க லைக்கழக தாவர உடலியலாளர் ஆன்ஸ்கா காமென் (Ansgar Kahmen) கூறுகிறார். காலநிலை சரியில்லாத நேரங்களில் மரங்கள் மரங்களாக வாழப் போராடு கின்றன. காலநிலை மாற்றத்தால் வறட்சி நீண்டுகொண்டே செல்கிறது. தீவி ரமடைகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது மரங்கள் வேகமாக வெட்டப்படு கின்றன. வறட்சியால் மரங்களில் ஏற்படும் விளைவுகள் பற்றி சரி யாகப் புரிந்துகொள்ள மியூனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2014 இல் ஒரு பரி சோதனையை தொடங்கினர். பைஸியா அபைஸ் (Picea abies) என்ற அறிவியல் பெயரு டைய நூறு மரங்களில் பாதி ஸ்புரூஸ் மரங்கள் மற்றும் ஃபாகஸ் சில்வாட்டிகா (Fagus sylvatica) என்ற அறிவியல் பெயருடைய ஐரோப்பியன் பீச் (European beech) மரங்களின் மேற்பகுதி யில் பிளாஸ்டிக் கூரைகள் அமைக் கப்பட்டு கோடை மழை தடுத்து நிறுத்தப்பட்டு ஐந்தாண்டுகளுக்கு செயற்கையான வறட்சி உருவாக் கப்பட்டது. மீதி மரங்கள் இயல்பான மழைப்பொழிவைப் பெற்றன. செயற்கையான வறட்சி இவ்வமைப்புகள் சுவர்களற்ற உலோகக் கூரைகளுடன் வீடுகள் போல அமைந்திருந்தன. மரங்க ளின் தண்டுகளுக்கு எண்கள் கொடுக்கப்பட்டன. மியூனிச்சிற்கு அருகில் உள்ள கிராண்ஸ்பர்க் (Kranzberg) என்ற இடத்தில் உள்ள காடுகளை ஆராயும் பகுதியில் ஸ்புரூஸ் மரங்களில் மழைப்பொழி வின்போது தாமாகவே மூடிக் கொள்ளும் விதத்தில் கூரைகள் அமைக்கப்பட்டு விஞ்ஞானிகள் செயற்கையான வறட்சியை உரு வாக்கினர். இந்த செயற்கை வறட்சி ஸ்புரூஸ் மரங்களைக் கொல்ல வில்லை. அருகில் இருந்த மரங்களுடன் ஒப்பிடும்போது வசந்த காலத்தில் இவை குட்டையான தண்டுகள், குட்டையான, ஒரு சில ஊசிகளை மட்டுமே உருவாக்கின. பரிசோத னைக் காலத்தில் இயற்கையான இழப்புடன் மரங்கள் 60% ஊசிகளை இழந்ததால் மரக் கவிகை அடர்த்தி குறைந்தது. சிறு ஊசி பரப்பால் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்ச, ஆக்சிஜனை உமிழ உதவும் இலைத் துளைகள் குறைந்த அளவு நீரை மட்டுமே இழந்தன. வெப்பத்தைச் சமாளிக்கும் திறன் அதிகம் உள்ள பீச் மர இலை கள் இலைப்பரப்பை அதிகமாக இழக்கவில்லை. செயற்கை வறட்சிக்கு மூன்றாண்டுகளுக்குப் பிறகு 2022 இல் ஏற்பட்ட திடீர் வறட்சியின்போது அதை முன்பு காணாத மரங்களை விட சிறிய அள வில் குறைவான இலைகள், ஊசி களைப் பெற்றிருந்த இந்த மரங்கள் குறைந்த உடலியல் அழுத்தத்திற்கு ஆளாகி சூழலை திறம்படச் சமா ளித்து நீரைச் சேமித்தன. மண்ணிற்கு அடியில் ஈரத் தன்மை அதிகமாக இருந்தது. ஸ்புரூஸ் மரங்களுக்கு அடியில் இருந்த பீச் மரங்களுக்கு இது உதவி யாக இருந்தது. உற்பத்தித் திறன் அதிகமுள்ள கன்றுகளை உரு வாக்குவதற்காக ஸ்புரூஸ் மரங்கள் வளர்ச்சியை ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்திக் கொண்டன. இத னால் இது போன்ற மரங்கள் வெட் டப்படாமல் அப்படியே விடப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “மரங்கள் நீண்டகாலம் வாழும் பசுமை மாறா இலைகள் போன்ற வற்றின் கடந்த கால அனுபவத்தி லிருந்து வருங்காலத்திற்கு தங் களை தயார்ப்படுத்திக் கொள்கின் றன என்பதை இது காட்டுகிறது. சுவிஸ் ஆல்ப்ஸ் காடுகளின் பினஸ் சில்வெஸ்ட்ரிஸ் (Pinus sylvestris) என்ற அறிவியல் பெயருடைய 900 பைன் மரங்களில் பாதி மரங்களில் 2003 முதல் கோடை ஈரப்பதத்தை நிலைநிறுத்த தெளிப்பான்கள் மூலம் நீர் தெளிக்கப்பட்டது. மழைக்காகக் காத்திருக்கும் மரங்கள் 2013 இல் மீதிப் பாதி மரங்களில் திடீர் வறட்சி உருவாக்கப்பட்டது” என்று ஹம்போல்ட் கலிபோர னியா ஸ்டேட் தொழில்நுட்ப பல்க லைக்கழக விஞ்ஞானி அனாலா சின் (Alana Chin) கூறுகிறார். எக்ஸ்ரே நுண்ணோக்கியின் மூலம் பைன் ஊசிகள், கிளைகளின் 47 பகுப்பாய்வு விவரங்களை ஆராய்ந்தபோது செயற்கை வறட்சியை அனுபவித்த மரங்கள் இயல்பான நிலையில் இருந்த வற்றைவிட அதிக அழுத்தத்திற்கு உள்ளானது கண்டறியப்பட்டது. மரங்கள் ஈரப்பதம் மிகுந்த காலத்திற்காக காத்திருக்கின்றன. “இலைப்பரப்பு பெரிதாக உள்ள மரங்கள் திடீர் வறட்சியால் பாதிக் கப்படுகின்றன. காலநிலையைப் பின்பற்றுவதில் ஏற்படும் சவால் களை மரங்கள் திறமையுடன் எதிர்கொள்கின்றன” என்று நியூ மெக்சிகோ வனச் சூழலியல் நிபு ணர் கிரேக் ஆலன் (Craig Allen) கூறுகிறார். இந்த மரங்கள் போலவே மற்ற மரங்களும் காலநிலை மாற் றத்தை சமாளித்து வாழுமா என்பது இன்னும் புரியாத புதிர் என்று ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.
