tamilnadu

img

பெண் கட்சி உறுப்பினர்களுக்கு அரசியல் பயிலரங்கம்

பெண் கட்சி உறுப்பினர்களுக்கு அரசியல் பயிலரங்கம் 

திருச்சிராப்பள்ளி, ஜூலை 3-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில், பெண் கட்சி உறுப்பினர்களுக்கான அரசியல் பயிலரங்கம் வியாழனன்று வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது.  பயிலரங்கத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா தலைமை வகித்தார். மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர், மாநிலக்குழு உறுப்பினர் ராதிகா, மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம், தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக மாவட்டக்குழு உறுப்பினர் சரஸ்வதி வரவேற்றார். பொன்மகள் நன்றி கூறினார்.