கரூரில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்
கரூர், அக். 19-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு முன்னாள் உறுப்பினர் எஸ். சண்முகசுந்தரம், கரூர் ஒன்றியக் குழு உறுப்பினர் கே. அன்பரசன் ஆகியோர் நினைவு தினத்தில், அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் கட்சியின் கரூர் ஒன்றியக் குழு சார்பில், நொய்யல் குறுக்கு சாலையில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி. முருகேசன் தலைமை வகித்தார். மறவை மா. குணசேகரன் வரவேற்றுப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சாமி. நடராஜன், மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஜீவானந்தம், கே.சக்திவேல் ஆகியோர் பேசினர்.
மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். ராஜேந்திரன், எஸ். பூரணம், ப. சரவணன், கே.வி. கணேசன், எம். தண்டபாணி, அ. காதர்பாட்சா, சக்திவேல், புகளூர் நகராட்சி கவுன்சிலர் இந்துமதி அரவிந்த் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
