tamilnadu

img

வாட்ஸ் அப்பில் ‘ஸ்டீகனோகிராபி’ மோசடி காவல்துறை எச்சரிக்கை

வாட்ஸ் அப்பில் ‘ஸ்டீகனோகிராபி’ மோசடி காவல்துறை எச்சரிக்கை

சென்னை: வாட்ஸ் அப் பயனர்களை குறி வைத்து ‘ஸ்டீகனோ கிராபி’ என்ற புதிய முறை யில் மோசடி நடைபெற்று வருவதாக தகவல் வெளி யாகியுள்ளது. இந்த மோசடியில் படம், வீடியோ அல்லது ஆடியோ கோப்புகளுக்குள் தீங்கு  விளைவிக்கும் கோடு கள், இணைப்புகள் மற்றும் தீம்பொருள் களை மறைத்து அனுப்பி  பயனர்களின் தக வல்களை திருடுகின்ற னர். இந்த மோசடியில் ஹேக்கர்கள் மொபைல் போனை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றனர். ரிமோட் அக்சஸ் மூலம் போன் கட்டுப்பாட்டை பெறுவது, கீலாக்கர் மூலம் வங்கி தகவல் களை திருடுவது, வாட்ஸ் அப் கணக்கை ஹேக் செய்வது, ரேன்சம் வேர்  தாக்குதல் மூலம் தனி நபர் கோப்புகளை லாக் செய்து பணம் பறிப்பது ஆகியவை அதன் ஆபத்துகள். இந்த மோசடியில் இருந்து தப்பிக்க வாட்ஸ் அப்பில் ஆட்டோ டவுன் லோட் வசதியை முடக்க வேண்டும். அதற்கு Settings, Storage & Data, Media Auto-Download என்ற வரிசையில் சென்று None  ஆப்ஷனை தேர்ந்தெ டுக்க வேண்டும். தெரி யாதவர்களிடம் இருந்து வரும் படங்களை கிளிக் செய்யக் கூடாது. Two-Step Verification செயல்படுத்துவது பாது காப்பானது.  தெரியாமல் இப்படிப் பட்ட படங்களை திறந் தால் உடனடியாக இண்டர் நெட்டை துண்டித்து, Airplane Mode ஆன் செய்து, வாட்ஸ்அப் இணைப்புகளை துண் டித்து, ஆண்டிவைரஸ் ஸ்கேன் செய்ய வேண்டும்.