tamilnadu

காவல் சித்ரவதை: தனி விசாரணை முகமை தேவை மக்கள் கூட்டியக்கம் வலியுறுத்தல்

காவல் சித்ரவதை: தனி விசாரணை முகமை தேவை மக்கள் கூட்டியக்கம் வலியுறுத்தல்

காவல் சித்ரவதை: தனி விசாரணை முகமை தேவை மக்கள் கூட்டியக்கம் வலியுறுத்தல் மதுரை, ஜூலை 12 - சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் காவல்துறையினரால் சித்ர வதைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழு வதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.  இதனைத் தொடர்ந்து, “காவல்துறை வன்முறைக்கு எதிரான  மக்கள் கூட்டு இயக்கம்” சார்பில் சனிக்கிழமை நீதியரசர் கிருஷ்ணய்யர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காவல்துறையின் சித்ரவதை மற்றும் வன்முறை களை தடுக்கும் வகையில் தனி விசாரணை முகமை மற்றும் சட்டங்கள் அவசியம் என வலியுறுத்தப்பட்டது. மாநிலத் தலைவர் பேரா.முரளி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில் 31 காவல் மரணங்கள் தமிழ கத்தில் நிகழ்ந்துள்ளன. விசாரணைக்கு உள்ளாகும் கைதிகள் மீது சித்ரவதை நிகழ்வது வழக்கமாகியுள்ளது. சித்ரவதை, காவல் மரணம், கொலை போன்றவற்றுக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் நிறு வப்பட வேண்டும். சித்ரவதை செய்வோர் மீது பணிப் பதி வேட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு, பதவி உயர்வுக்கு முன் பரி சீலனை ஆகியவை நடைமுறைக்கு வர வேண்டும். உளவி யல் சிகிச்சை, சுதந்திர நிபுணர் குழு விசாரணை, உத்தரவு பொறுப்பு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.  ஐ.நா.வின் சித்ரவதை எதிர்ப்பு உடன்படிக்கையை இந்தியா  உடனே ஏற்புறுதி செய்ய வேண்டும். நீதிபதி சி.டி.செல்வம் தலை மையிலான ஐந்தாவது போலீஸ் ஆணையம் பரிந்துரைத் துள்ள போதும், அவை அமல்படுத்தப்படவில்லை. இதனை பொதுமக்கள் மத்தியில் பரப்ப வேண்டியதுடன், மேலும் பரிந்து ரைகள் தேவையா என்பதைக் கண்டறிய புதிய குழு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையில், தமிழக மெங்கும் உள்ள 151 அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கையொப் பமிட்டு, தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று  கூறினார்.